Tuesday, March 04, 2014
இலங்கை::மியன்மார் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, இந்திய பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கை இன்று சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இதனைத்தவிர, மியன்மார் ஜனாதிபதியையும், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் பிரதமர்களையும் ஜனாதிபதி சந்திக்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடக இணைப்புச் செயலாளர் விஜயானந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
மியன்மாரின் நெபிடோவில் நடைபெறும் மூன்றாவது பிம்ஸ்டெக் மாநாட்டிலும் ஜனாதிபதி இன்று கலந்துகொள்ளவுள்ளார்.
வங்காள விரிகுடாவை அண்மித்துள்ள நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான பிம்ஸ்டெக் மாநாட்டில் மியன்மார், பங்களாதேஷ், இந்தியா, தாய்லாந்து, பூட்டான், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்
பிம்ஸ்டெக் மாநாடு 2004 ஆம் ஆண்டு முதன்முறையாக பேங்கொக்கிலும், அதன்பின்னர் 2008 ஆம் ஆண்டு புதுடில்லியிலும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.



No comments:
Post a Comment