Tuesday, March 04, 2014
இலங்கை::ஐ.நா. மனித உரிமை மாநாட்டில், அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்தை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக இலங்கை அறிவித்துள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் மாநாடு ஜெனீவாவில் நேற்று தொடங்கியது. அப்போது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை மற்றும் இங்கிலாந்து, கனடா நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்கள், இலங்கை தொடர்பான அறிக்கைகளை தாக்கல் செய்தனர்.
இலங்கையில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்கா மூன்றாவது முறையாக தீர்மானம் கொண்டு வரவுள்ளது. இலங்கையில் போர் முடிந்து 5 ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில், மனித உரிமை மீறல்கள் தொடர்பான மெத்தன நடவடிக்கைகள், மறுசீரமைப்பு பணிகளில் தாமதம் ஆகியவை தொடர்பாக 3-வதாக ஒரு தீர்மானத்தை கொண்டு வர அமெரிக்கா முனைப்பு கொண்டுள்ளது.
இதனை சந்திக்க இலங்கை தயாராக இருப்பதாக அதிபர் மகிந்தா ராஜபக்சவின் செய்தித் தொடர்பாளர் மோகன் சமரநாயகே தெரிவித்துள்ளார். இதில் இலங்கை வெற்றி பெறும் என உறுதியாக நம்புவதாக சமரநாயகே கூறியிருக்கிறார்.

No comments:
Post a Comment