Thursday, March 13, 2014

யுத்தப் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளின் மீளமைப்பு நடவடிக்கைகளுக்காக ஜப்பான் அரசாங்கம் நிதி உதவி!

Thursday, March 13, 2014
இலங்கை::வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்தப் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளின் மீளமைப்பு நடவடிக்கைகளுக்காக ஜப்பான் அரசாங்கம் நிதி உதவி வழங்கி இருக்கிறது.

இதற்காக ஜப்பான் 3.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் நொபுஹிட்டோ ஹோபோ இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த நிதியைக் கொண்டு சமூக மறுசீரமைப்பு வேலைத்திட்டம், வாழ்வாதார மேம்பாடு பெண்கள் அபிவிருத்தி போன்ற வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

ஐக்கிய நாடுகளின் மனித குடியேற்றம் மற்றும் நிலையான அபிவிருத்தி நிலையத்தின் ஊடாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது

No comments:

Post a Comment