Thursday, March 13, 2014

அமெரிக்காவுக்குப் பயந்து நல்லிணக்க, காணாமல் போனோர் ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படவில்லை!

Thursday, March 13, 2014
இலங்கை::நான் எந்தவொரு பலம்வாய்ந்த வெளிநாட்டு சக்திக்கும் அஞ்சி அவற்றின் விருப்பத்திற்கு அமைய எக்காரணம் கொண்டும் அடிபணிய தயாராக இல்லை. என்னை இவ்வுயர் பதவியில் அமர்த்திய நம்நாட்டு மக்களின் விருப்பப்படியே சிரம்தாழ்த்தி எதனையும் செய்வேன்” என்று ஜெனீவாவில் அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள பிரேரணை பற்றி மனம் விட்டு பேசிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

எந்தவொரு வெளிநாட்டு சக்திக்கும் அஞ்சி தான் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவையோ காணா மல் போனோரை கண்டுபிடிப்பதற்கான ஆணைக்குழுவையோ நியமிக்கவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், மக்களுக்கு இருக்கும் சிறு பிரச்சினைகளை சுமுக மாக தீர்த்து வைக்கும் நல் எண்ணத்துடனேயே தமது அரசாங் கம் இவ்விரு ஆணைக்குழுக்களை நியமித்தது என்று கூறி னார்.

சில வல்லரசு நாடுகள் தங்கள் மறைமுக நோக்கங்களை நிறை வேற்றிக் கொள்வதற்கு உதவக்கூடிய வகையில் இவ்விதம் அச்சுறுத்தல்களை சர்வதேச அரங்குகளில் சில நாடுகளுக்கு எதிராக கொண்டுவந்து அவற்றை துன்புறுத்தி அதன் மூலம் தங்கள் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்கின்றன. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஈரானுக்கும் ஈராக்கிற்கும் இடை யிலான 10 ஆண்டு யுத்தத்தின் போது ஈரானின் படைப் பல த்தை பார்த்து அஞ்சிய அமெரிக்காவும் அதனுடன் இணைந்து ள்ள மேற்கத்திய நாடுகளும் கூட்டுச் சேர்ந்து ஈராக்கிற்கும் அதன் அதிபர் சதாம் ஹுசைனுக்கும் பெருமளவு ஆயுதங்க ளையும் விமானங்களையும் பணத்தையும் அன்பளிப்பாக வழ ங்கின.

எவ்வளவுதான் அமெரிக்காவின் உதவி இருந்தாலும் ஈரானை 10 ஆண்டுகால யுத்தத்தின் போது ஈராக்கினாலும் அமெரிக்கா வின் சகாக்களினாலும் தோற்கடிக்க முடியவில்லை. அதற்குப் பின்னர் ஈராக்குடன் அமெரிக்கா நட்புறவை மேற்கொண்டு வந்த போதிலும் ஈராக்கும் ஒரு பலம்வாய்ந்த நாடாக மாறி விடும் என்ற அச்சம் அமெரிக்காவின் மனதில் தோன்றிய போது அமெரிக்கா ஈராக் மீது பகை உணர்வை மேற்கொண் டது. இந்த சந்தர்ப்பத்தில் ஈராக்கிய ஜனாதிபதி சதாம் ஹுசைனும் ஒரு பிழையை செய்து விட்டார். அவர் அமெரிக்காவின் ஆதரவு டன் பாதுகாப்பாக இருந்து வரும் குவைத் மீது படையெடுத்து, குவைத் நாட்டின் எண்ணெய் வளங்களை சூறையாட எத்த னித்தார். இதனால், குவைத்தை பாதுகாக்கப் போகிறோம் என்ற போர்வையின் கீழ் அமெரிக்கா ஈராக் மீது போர் தொடுத்தது.

அந்த யுத்தத்ததை அடுத்து ஈராக்கிடம் இரசாயன ஆயுதங்கள் இருக்கின்றன என்ற போலிக்குற்றச்சாட்டை சுமத்தி ஈராக் மீது போர் தொடுத்த அமெரிக்கா இறுதியில் சதாம் ஹுசைனை கைது செய்து அந்த மனிதரை தூக்கிலிட்டது. அதற்குப் பின் னர் ஈராக் சின்னாபின்னமாகி இன்று வன்முறைகள் நாளாந்தம் இடம்பெறும் நாடாக மாறுவதற்கு அமெரிக்காவின் தலையீடே காரணமாகும். அதுபோன்றே அமெரிக்கா லிபியாவிலும் தலையிட்டு இறுதியில் லிபியாவில் முடிசூடா மன்னனாக விளங்கிய முஅம்மர் கடா பியையும் ஒரு சாதாரண குற்றவாளியைப் போன்று நடுத்தெரு வில் வைத்து சுட்டுக் கொன்றது.

ஈராக்கைப் போன்று, இன்று லிபியாவும் சீர்குலைந்து போய் அவ் விரு நாட்டு மக்களும் வறுமையிலும், குண்டு மழை பொழி யும் என்ற அச்சத்துடனும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், நாம் இத்தகைய அச்சுறுத்தல்களுக்கோ மனித உரிமை மீறல் பற்றி பேசி எங்களை தண்டிக்க முயற்சி செய்யும் நவநீதம் பிள்ளை சீமாட்டி போன்றவர்களுக்கோ என்றுமே அஞ்சப் போவதில்லை என்றும் ஜனாதிபதி கூறினார்.

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்மொழிந்திருக்கும் பிரே ரணை குறித்து ஜெனீவா மனித உரிமைகள் பேரவை கட்டிடத் தில் ஊடகவியலாளர்களை சந்தித்த பெருந்தோட்ட கைத்தொ ழில் துறை அமைச்சரும் மனித உரிமைகள் விவகாரங்களுக் கான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியுமான மஹிந்த சமரசிங்க ஜெனீவா தீர்மானத்தை தோற்கடிக்க அனைத்து நாடு களும் ஒன்றுபட வேண்டுமென்று தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்திருக்கும் பிரேர ணைகள் போன்று எதிர்காலத்தில் தங்கள் சொற்படி நடக்க தய க்கம் காட்டும் மற்ற நாடுகளையும் இலக்கு வைத்து தண்டிப் பதற்கும் அமெரிக்கா தயக்கம் காட்டாதென்று அவர் கூறினார்.

தனக்கு எதிராக உலக நாடுகள் திரும்பிவிடும் என்ற அச்சத்தி னால் தான் அமெரிக்கா சிறிய நாடுகளை கிராமத்தில் உள்ள குண்டர்களைப் போன்றுதான் பயமுறுத்துகின்றதே ஒழிய அவ ர்களால் அந்நாடுகளுக்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத் தும் அளவுக்கு தைரியம் இருக்காது என்று சர்வதேச அரசி யல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

No comments:

Post a Comment