Thursday, March 13, 2014

கனடிய நாட்டுத் தூதுவர் இன்று யாழிற்கு விஜயம்- பல தரப்பினர்களையும் சந்திக்க ஏற்பாடு!

Thursday, March 13, 2014
இலங்கை::கனடாவின் இலங்கைக்கான தூதுவர் நேற்று யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த விஜயத்தின் தொடராக நாளையதினம் பலரையும் சந்தித்துக் கலந்துரையாட உள்ளதுடன், பல்வேறு இடங்களிற்கும் செல்லவுள்ளார்.
 
அதாவது, இன்று காலை தெல்லிப்பழைக்கு விஜயம் செய்யும் தூதுவர், கனடாவின் உதவியுடன் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவுத் திட்டம் தொடர்பில் அங்குள்ள நகுலேஸ்வரம் மற்றும் பொன் பரமானந்தா ஆகிய இரண்டு வித்தியாலயத்திற்கு சென்று ஆராயவுள்ளார்.
 
இதனைத் தொடர்ந்து வட மாகாண விவசாய அமைச்சர் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதுடன், தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தையும் சந்திக்கவுள்ளார். இந்நிலையில், மாவட்டத்தின் சிவில் சமுகப் பிரதிநிதிகளையும் சந்தித்துக் கலந்துரையடவுள்ளதுடன், பல்வேறு இடங்களிற்கும் செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment