Monday, March 10, 2014

யுத்தக் குற்றச் செயல் விசாரணைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு தீர்மானிக்க முடியாது: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Monday, March 10, 2014
இலங்கை::யுத்தக் குற்றச் செயல் விசாரணைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு தீர்மானிக்க முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
யுத்தக் குற்றச் செயல்கள் n;தாடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமா இல்லையா என்பதனை இலங்கை மக்களே தீர்மானிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் சரியானதா இல்லை தவறானதா என்பதனை மக்களே தீர்மானிக்க வேண்டும் எனவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இது குறித்து நிர்ணயிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்கள் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு கோரியிருந்தால் அதனை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடி பணியப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment