Monday, March 10, 2014

இலங்கையில் இராணுவ முகாம் ஒன்றை அமைப்பதற்கு அமெரிக்கா முயற்சி: தமரா குணநாயகம்!

Monday, March 10, 2014
இலங்கை::இலங்கையில் இராணுவ முகாம் ஒன்றை அமைப்பதற்கு அமெரிக்கா முயற்சித்து வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவாவிற்கான முன்னாள் இலங்கைப் பிரதிநிதி தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை, யுத்தக் குற்றச் செயல்கள் போன்ற காரணிகளின் அடிப்படையில் அதன் காரணமாகவே அமெரிக்கா, இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இராணுவ ரீதியான தந்திரோபாயங்களை இலங்கையிலிருந்து முன்னெடுப்பதே அமெரிக்காவின் உள்நோக்கமாக இருக்கும் என அவர் ஊகம் வெளியிட்டுள்ளார்.

ஆசிய பிராந்திய வலயத்தில் இராணுவ ரீதியாக ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ளவே அமெரிக்கா முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். தென் சூடானில் நடந்தது போன்று இலங்கையில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தியேனும் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளவே அமெரிக்கா முனைப்பு காட்டி வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் மெய்யாகவே சமாதானம் நிலைநாட்டப்பட வேண்டுமென்பது அமெரிக்காவின் விருப்பம் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காவின் உத்தேச தீர்மானத்தை உன்னிப்பாக அவதானித்தால் இந்த உண்மை புலப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையை ஓர் தோல்வியடைந்த நாடாக வெளிக்காட்டுவதே அமெரிக்க தீர்மானத்தின் உள்நோக்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை ஓர் தோல்வியடைந்த நாடு என்பதனை திட்டமிட்ட வகையில் தீர்மானத்தில் சுடு;டிக்காட்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றக் கட்டமைப்பு, மற்றும் சட்டம் ஒழுங்கு, நல்லாட்சி தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை இதனை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமை ஆணையாளரினால் விசாரணை நடத்த அதிகாரம் அளிக்கும் வகையிலேயே இந்த தீர்மானம் அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதாவது சர்வதேச ரீதியான விசாரணைக்கு வழியமைக்கும் வகையில் இந்த தீர்மானம் உருவாக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையை சர்வதேச ரீதியாக தனிமைப்படுத்தி பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா முயற்சித்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தீர்மானம் நிறைவேற்றப்படுகின்றோ இல்லையோ அது குறித்து அமெரிக்காவிற்கு கவலையில்லை எனவும், வாக்களிப்பின் போது எத்தனை நாடுகள் ஆதரளிக்கின்றன எத்தனை நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என்பதனையே அமெரிக்கா கவனத்திற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இலங்கையை சர்வதேச அரங்கிலிரந்து ஓரம் கட்டுவதே அ;மெரிக்காவின் பிரதான இலக்கு என தமரா குணநாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment