Monday, March 10, 2014
இலங்கை::அமெரிக்காவின் உத்தேச தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் மற்றம் வட மாகாணசபையின் முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.
கூட்டு ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கையில் நிரந்தர சமாதானமும், நல்லிணக்கமும் ஏற்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளனர்.அமெரிக்காவின் உத்தேச தீர்மானம் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளன.அனைத்து இன மக்களும் சுயகௌரவத்துடன், ஐக்கியமாக வாழக்கூடிய பின்னணி உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளனர்.
நிரந்தமான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு நல்லிணக்கம் மற்றும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் ஆகியன மிகவும் அவசியமானது என்பதே தமது நிலைப்பாடு என குறிப்பிட்டுள்ளனர்.
உண்மையைக் கண்டறிந்து அனைத்து தரப்பினராலும் ஏற்றக்கொள்ளக் கூடிய ஓர் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்யது அவசியமானது என தெரிவித்துள்ளனர். இராணுவத்தினர் பாரியளவில் தமிழ் மக்களின் காணிகளை சுவீகரித்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.வடக்கு கிழக்கு தமிழ் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் சிவிலியன் நடவடிக்கைகளில் படையினரின் மிதமிஞ்சிய தலையீடுகள் போன்றன ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வடக்கு கிழக்கு மாகாணங்களின் சனத்தொகைப் பரம்பலில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துவதில் அரசாங்கம் கூடுதல் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.வடக்கு கிழக்கு மாகாணங்களின் கலாச்சார இனத்துவ அடையாளங்களை அழிப்பதற்கு முயற்சிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைமை சீர்குலைந்துள்ளதாகத் தெரிவித்தள்ளனர்.
யுத்தம் இடம்பெற்ற காலத்திலான மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைகள் குறித்த தீர்மானத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.நல்லிணக்கம் மற்றும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் ஆகியன தொடர்பில் முக்கிய திருப்பு முனையாக இந்த தீர்மானம் அமையும் என நம்பிக்கை கொண்டுள்ளதாக விக்னேஸ்வரன் மற்றும் சம்பந்தன் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டு ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment