Monday, March 10, 2014

பிரித்தானியாவின் செனல்4 ஊடகத்தின் ஆவணப்படம் போலியானது: அரசாங்கம்!


Monday, March 10, 2014
இலங்கை::பிரித்தானியாவின் செனல்4 ஊடகத்தினால் வெளியிடப்பட்டுள்ள புதிய ஆவணப்படம் போலியானது என அரசாங்கம் அறிவித்துள்ளது. இராணுவப் படையினர் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபடுவது தொடர்பிலான புதிய ஆவணப்படமொன்றை பிரித்தானியாவின் செனல்4 ஊடகம் வெளியிட்டுள்ளது.படையினர், கொல்லப்பட்ட பெண் போராளிகளின் சடலங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது குறித்த காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

எனினும், இந்த ஆவணப்படும் போலியானது எனவும், கணனி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.செனல்4 ஊடகம், ஊடகத்துறையை இழிவுபடுத்தி வருவதாக பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் குற்றம் சுமத்தியுள்ளது.

இலங்கைக்கு எதிரான வகையில் குரோத உணர்வுடன் செனல்4 ஊடகம் செயற்பட்டு வருகின்றமை அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இவ்வாறான நடவடிக்கைகள் இலங்கைக்கு எந்த வகையிலும் நன்மையை ஏற்படுத்தாது என குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment