Thursday, March 13, 2014

புலி பயங்கரவாதிகளுக்கு எதிராகவே யுத்தம் நடத்தப்பட்டது: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Thursday, March 13, 2014
இலங்கை::தமிழ் மக்களுக்கு எதிராக யத்தம் முன்னெடுக்கப்படவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.காலி சமனல மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கம் யுத்தம் செய்யவில்லை எனவும்,  புலி பயங்கரவாதிகளுக்கு எதிராகவே யுத்தம் நடத்தப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் என்ற ரீதியில் மக்களின் இதயங்களை வென்றெடுப்பதே பிரதான இலக்காக அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிலர் ஜெனீவாவில் இருந்து கொண்டு நாட்டில் மத நல்லிணக்கம் கிடையாது என குற்றம் சுமத்தி வருவதாகவும், மத நல்லிணக்கம் உண்டா இல்லையா என்பதனை நேரில் வந்து பார்த்து தெரிந்துகொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பிரச்சினைகள் இன்றி ஆட்சி நடாத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என்ற போதிலும், சில தூதுவராலயங்கள் மற்றம் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நாட்டில் குழப்பம் விளைவிப்பதில் ஆர்வம் காட்டி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நல்ல ஜனநாயக ரீதியான தலைவர் என்ற வகையில் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவும் விலகவும் எவ்வித தடையும் யாருக்கும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாரையும் விரட்டியடிக்க வேண்டிய அவசியம் கிடையாது எனவும் தேவையென்றால் ஆளும் கட்சியிலிருந்து விலகிக்கொள்ள சாத்தியம் உண்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அபிவிருத்தியை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு வெற்றிச் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு ஜனாதிபதி மக்களிடம் கோரியுள்ளார்.

No comments:

Post a Comment