Tuesday, March 11, 2014

திவிநெகு - வாழ்வின் எழுச்சி வேலைத்திட்டங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் நிகழ்வு!

Tuesday, March 11, 2014
இலங்கை::திவிநெகு - வாழ்வின் எழுச்சி வேலைத்திட்டத்தினை இவ்வருடம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள செயற்திட்டங்கள் தொடர்பாக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கும் விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச செயலக ரீதியாக நடைபெற்று வருகின்றன.

பிரதேச செயலக ரீதியாக நடைபெற்றுவரும் இக் கருத்தரங்குகளில் வாழ்வின் எழுச்சி வேலைத்திட்டத்தின் வாழ்வாதாரத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துதல் தொடர்பிலும், அதன்போது கைக்கொள்ள வேண்டிய பொறிமுறைகள் மற்றும் பல விடயங்கள் தொடர்பிலும் தெளிவுபடுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நேற்றைய தினம் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் மாவட்ட சமுர்த்திப்பிரதிப்பணிப்பாளர் பி.குணரெட்ணம் தலைமையில் நடைபெற்றது.

இவ் விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு, கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று மேற்கு , கோரளைப்பற்று, கோறளைப்பற்று தெற்கு, ஏறாவூர் பற்று, ஏறாவூர் நகர், உள்ளிட்ட பிரதேச செயலகப்பிரிவுகள் நடைபெற்று முடிவடைந்துள்ளன.

ஏனைய காத்தான்குடி, மண்முனைப்பற்று , மண்முனை தென்மேற்கு, மண்முனை தென் எருவில் பற்று, போரதீவுப்பற்று உள்ளிட்ட பிரதேச செயலகங்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் இந்த வாரத்துக்குள் நிறைவு செய்யப்படும் என பிரதிப்பணிப்பாளர் பி.குணரெட்னம் தெரவித்தார்.

இந்த விழிப்புணர்வுக் கருத்தரங்கில் மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர், பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக அதிகாரிகள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

வாழ்வின் எழுச்சித்திட்டத்துக்கென இவ்வருடம் மட்டக்களப்பு மாவட்டத்துக்க 60 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,
வாழ்வாதார வேலைத்திட்டம் மீன்பிடி, விவசாயம், கால்நடை வளர்ப்பு, வியாபாரம், சுய கைத்தொழில் உள்ளிட்டவைகளை உள்ளடக்கியதாக அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment