Tuesday, March 11, 2014

சேனல்–4ன் புதிய ஒளிநாடா குறித்து வெளிவிவகார அமைச்சு கவனம் செலுத்தும்: அமைச்சர் சுசில் பிரேமஜயந்த!

Tuesday, March 11, 2014
இலங்கை::சேனல்–4ன் புதிய ஒளிநாடா தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கையெடுக்கப்படுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது. உள்நாட்டு யுத்தம் தொடர்பாக சேனல்–4 ஊடகம் புதிய ஒளிநாடாவொன்றை வெளியிட்டுள்ள நிலையில்,

கொழும்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின்போது, அது தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு பதிலளித்த அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், புதிய ஒளிநாடா விடயம் எந்தளவுக்கு மேலெழுந்துள்ளது எனத் தெரியவில்லை. ஆனால், இந்த விடயம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சு கவனம் செலுத்தும்.

இதேவேளை, அந்த ஒளிநாடாவில் ஐ.தே.க. தலைமையகமான ஸ்ரீகொத்தாவிலிருந்து எடுக்கப்பட்ட படக் காட்சிகள் உள்ளனவோ தெரியவில்லை. பொதுநலவாய மாநாட்டு காலப்பகுதியில் இலங்கைக்கு வந்திருந்த அவர் (கலும் மக்ரே) ஸ்ரீகொத்தாவுக்கும் சென்றிருந்தார்.
இந்நிலையில், அந்த ஒளிநாடாவின் உள்ளடக்கங்கள் தொடர்பாக ஆராய்ந்து அது தொடர்பில் நடவடிக்கையெடுப்போம் என்றார்.


No comments:

Post a Comment