Tuesday, March 11, 2014

வலி.வடக்கில் 6,500 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் அரசாங்கத்துக்குரியது:பிரிகேடியர் ஈஸ்வரன்!

Tuesday, March 11, 2014
இலங்கை::வலி.வடக்கில் இராணுவத்தினரின் உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்டபட்ட 6 ஆயிரத்து 500 ஏக்கருக்கு மேற்பட்டகாணிகள் அனைத்தும் அரசாங்கத்திற்குரிய காணி என்று இராணுவத்தினர் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.  

நலன்புரி நிலையத்தின் தலைவர்கள் மற்றும் மீள்குடியேற்ற குழுவின் பிரதிநிதிகளுடன் வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து, நலன்புரி நிலையங்களில் தங்கி வாழ்ந்துவரும் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில், நேற்றையதினம் யாழ். காங்கேசன்துறை படைமுகாமில் இராணுவத்தினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே 515வது பிரிகேடியர் ஈஸ்வரன் மேற்கண்டாவாறு தெரிவித்துள்ளார்.
 

No comments:

Post a Comment