Tuesday, March 11, 2014

பிரித்தானியாவின் செனல்4 ஊடகத்தின் புதிய ஆவணப்படம் பற்றி தெரியாது: ஸ்டிபன் டுஜாரீக்

Tuesday, March 11, 2014
இலங்கை::பிரித்தானியாவின் செனல்4 ஊடகத்தின் புதிய ஆவணப்படம் பற்றி தெரியாது என ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் செனல்4 ஊடகம் புதிய ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இராணுவப்படையினர், உயிரிழந்த பெண் போராளிகளின் சடலங்களை  பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்வது தொடர்பான காட்சிகள் இந்த ஆவணப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆவணப்படத்தை பார்க்கவில்லை எனவும், ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் பான் பான் கீ மூனின் முன்னாள் பேச்சாளர் மார்டின் நெகர்கீ இலங்கை விவகாரம் குறித்து அதிகளவில் பேசியிருப்பதாகவும் புதிய பேச்சாளர் ஸ்டிபன் டுஜாரீக் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment