Sunday, March 16, 2014
பெரம்பூர்::பெரம்பூர் பேரக்ஸ் சாலை யில் உடைக்கப்பட்ட ராஜீவ்காந்தி சிலைக்கு பதிலாக வடசென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் வெண்கலத்தால் செய்யப்பட்ட சிலை தயாரிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்றிரவு நடந்தது. மாவட்ட தலைவர் ராயபுரம் மனோ தலைமை வகித்தார். தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், புதிய சிலையை திறந்து வைத்து பேசியது:
சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியை யாரும் தவறாக நினைக்க கூடாது. காங்கிரஸ் வலுவான நிலையில் உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறோம். விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கவில்லையே என்பதை மற்ற கட்சியினர் தேர்தலுக்கு பிறகுதான் வருத்தப்படுவார்கள். இவ்வாறு ஞானதேசிகன் பேசினார்.நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ வேணுகோபால் மற்றும் எர்ணட்ஸ்பால், சக்திவடிவேல், ஜோதி, பெரம்பூர் பாலு, உமாபதி மற்றும் நிர்வாகிகள் கலந்து -

No comments:
Post a Comment