Monday, March 17, 2014
புழல்::எல்லை மீறி இந்தியப் பகுதிக்குள் நுழைந்ததால் கைது செய்யப்பட்ட
இலங்கை மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
சென்னை துறைமுக கடல் பகுதிக்குள்
கடந்த ஜன.,31, மற்றும் மார்ச் 12ம் தேதிகளில் அத்துமீறி நுழைந்த 14 இலங்கை
மீனவர்களும், கடந்த, பிப்., மாதம் 12ம் தேதி நாகப்பட்டினம் கடல் பகுதியில்
நுழைந்த 25 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில், ஒருவர்
சைதாப்பேட்டை கிளை சிறையிலும் மற்ற 38 பேர் புழல் மத்திய சிறையிலும்
அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், அரசு உத்தரவின்படி, முதற்கட்டமாக 14
மீனவர்கள், கடந்த இரு தினங்களில் விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து
நாகப்பட்டினத்தில்
கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் இருந்த 24 பேர், சைதாப்பேட்டை கிளை
சிறையில் இருந்த ஒருவர் என, 25 பேரும் நேற்று காலை 9.00 மணிக்கு விடுதலை
செய்யப்பட்டனர்.

No comments:
Post a Comment