Tuesday, March 18, 2014
இலங்கை::நவநீதம்பிள்ளை. இந்த ஆண்டு ஓகஸ்ட் 31 ஆம் திகதியுடன் தனது பொறுப்பு நிலையிலிருந்து அவர் விலகிச் செல்கின்றார்.
அவர் வகித்துவரும் ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் என்ற பொறுப்பு நிலையில், தான் எதிர்கொண்ட சவால்களைப் பற்றி அவர் பேசிய போது, ‘அவர் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஒரு சர்வதேச சட்டத்தரணியா?’ என்று கேட்கப்பட்டார். அப்போதுதான், “நான் ஒரு சர்வதேச நீதிபதி!” என்று கூறினார்.
அவர் வகித்துவரும் ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் என்ற பொறுப்பு நிலையில், தான் எதிர்கொண்ட சவால்களைப் பற்றி அவர் பேசிய போது, ‘அவர் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஒரு சர்வதேச சட்டத்தரணியா?’ என்று கேட்கப்பட்டார். அப்போதுதான், “நான் ஒரு சர்வதேச நீதிபதி!” என்று கூறினார்.
மனித உரிமைகளின் மேம்பாட்டுக்காகப் பாடுபடும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்துப் பாராட்டிய நவி பிள்ளை, மனித உரிமைகளைக் காக்கும் பொறிமுறையை ஒரு புதிய தரத்திற்கு உயர்த்திய பெருமை சிவில் சமூகத்தையே சாரும் என்றும் குறிப்பிட்டார்.
இலங்கை (புலி ஆதரவு) மனித உரிமைச் செயற்பாட்டாளர் றுக்கி பெர்ணான்டோ மற்றும் அருட்தந்தை பிரவீன் மகேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டது தொடர்பிலும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்தும் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுவது தொடர்பிலும் தனது ஆழ்ந்த அக்கறையையும் அவர் வெளியிட்டார்.
தனது மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான பிரேரணை ஒன்றை ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை எதிர்கொண்டு நிற்கும் வேளையில் கூட இவ்வாறான சம்பவங்கள் நிகழ்வது தன்னை குழப்பத்தில் ஆழ்த்துகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை தொடர்பாக குறிப்பிட்டுக் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்குப் பதில் அளிக்கையில், “சர்வதேச விசாரணை ஒன்றிற்கு உத்தரவிடும் ஆணை எனக்கு இருக்கின்றது” என்று அவர் தெரிவித்தார்.
மனித உரிமை ஆணையாளரின் செயலகம் (Office of the High Commissoner for Human Rights -OHCHR) சர்வதேச விசாரணை ஒன்றுக்கு உத்தரவிடக்கூடிய அதிகாரத்தைக் கொண்டிருக்கவில்லை என இலங்கையும் வேறு சில நாடுகளும் முன்வைக்கும் வாதங்கள் குறித்துக் கேட்கப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
உலக அளவில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பிரயோகத்தை அடியோடு நிராகரித்த நவி பிள்ளை, இலங்கை அரசாங்கத்தின் கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் கேள்விக்கு உட்படுத்தினார்.
நேற்று திங்கட்கிழமை, 2014 மாரச் 17 அன்று, அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமைக் காப்பாளர்களுக்கு உரை நிகழ்த்தும் போதே இந்தக் கருத்துக்களை அவர் தெரிவித்தார்.
மனித உரிமைகளைக் காத்து, கண்காணித்து, மேம்படுத்திச் செல்வதற்காக அவர்களை அவர் பெருமைப்படுத்தினார். ஐ. நா. மனித உரிமைப் பேரவை ஆணையாளராகத் தனது பொறுப்புக்காலம் ஓகஸ்ட் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த பின்னர், தானும் ஒரு மனித உரிமைகள் காப்பாளராக, தனது பழைய வேலையைத் தொடரப் போவதாக அவர் தெரிவித்தார்.




No comments:
Post a Comment