Wednesday, March 19, 2014
திருவண்ணாமலை::மத்தியில் தமிழகத்தின் ஆட்சி அமைய
வேண்டும்.இதற்காக அ.தி.மு.க. வேட்பாளர்கள் 40 பேர்களையும் வெற்றிபெறச்செய்ய
வேண்டும் என்று திருவண்ணாமலை பிரசார கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா
கூறினார். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை
ஆதரித்து முதல்_அமைச்சர் ஜெயலலிதா சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம்
செய்து வருகிறார்.
திருவண்ணாமலை பாராளு மன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக ஆர்.வன ரோஜா போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து முதல்_ அமைச்சர் ஜெயலலிதாநேற்று (செவ்வாய்க்கிழமை) பிரசாரம் செய்தார்.
நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் வருகின்ற 24.4.2014 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா, நேற்று (18.3.2014 _ செவ்வாய்க் கிழமை), திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி கழக வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக, சென்னையில் இருந்து வான் வழியாகப் புறப்பட்டு திருவண்ணாமலை சென்றடைந்தார். அங்கு, திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டக் கழகங்களின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. திருக்கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதையும் வழங்கப்பட்டது.
`செங்கம் அருகே உள்ள அம்மாப்பாளையம் கிராமத்தில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்ட மான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா, தேர்தல் பிரச்சார பொதுக்கூட்ட மேடையை வந்தடைந்து, அங்கு வெயிலையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கில் அலைகடலெனத் திரண்டிருந்த கூட்டத்தினருக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு, திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் ஆர். வனரோஜாவை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.பாராளுமன்ற வடிவில் அமைக்கபப்ட்ட மேடையில் முதல்_அமைச் சர் ஜெயலலிதா பேசியதாவது:_
நடைபெற இருக்கின்ற மக்களவைத் தேர்தல் வெறும் ஆட்சி மாற்றத்திற்காக நடைபெறுகின்ற சாதாரணத் தேர்தல் அல்ல. இந்திய மக்களுக்கு விடுதலையைப் பெற்றுத் தருகின்ற தேர்தல். தமிழ் நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் தொழில் வளர்ச்சிக்கும், வேளாண் வளர்ச்சிக்கும் அடிப்படை ஆதாரமாக விளங்குவது மின் உற்பத்தி. முந்தைய தி.மு.க. ஆட்சியில் தேவைக்கேற்ப மின் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக கடும் மின் பற்றாக்குறை நிலவியது. நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் இதனைத் தீர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தேன். எனது அரசின் முனைப்பான நடவடிக்கைகள் காரணமாக ஏறத்தாழ 2,500 மெகாவாட் அளவுக்கு கூடுதல் மின்சாரம் தற்போது உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக மின் பற்றாக்குறை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், 3,300 மெகாவாட் மின்சாரத்தை நீண்ட கால அடிப்படையில் கொள்முதல் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. விரைவில் மின் உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவினை எய்தும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது தவிர எதிர்கால மின் தேவையைக் கருத்தில் கொண்டு 5,300 மெகாவாட் அளவுக்கு புதிய திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கில் தொலைநோக்குத் திட்டம் 2023 மற்றும் புதிய தொழிற் கொள்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. தென் மாவட்டங்களில் தொழில் முனைவோர் தொழில் தொடங்க ஏதுவாக தொழிற் பூங்காக்களை உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இங்கு தொழில் தொடங்க முன் வரும் தொழில் முனைவோருக்கு பல்வேறு கூடுதல் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் தவறான கொள்கைகளால் ஏறிக் கொண்டே போகும் விலைவாசி உயர்விலிருந்து தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய, நடுத்தர மக்களை பாதுகாக்கும் வகையில் பல நடவடிக்கைகளை எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு எடுத்து வருகிறது. இவை விலைவாசி உயர்விலிருந்து சாமானிய மக்களை காத்து வருகின்றன என்றாலும், கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வருவதே மக்களுக்கு எப்போதும் பயன் அளிக்கக் கூடியதாகும். இதற்கு மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளில் மாற்றம் தேவை. இந்த மாற்றத்தினை செய்ய, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை 40 தொகுதிகளிலும் நீங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று உங்களையெல்லாம் அன்புடன் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? (செய்வோம் என பலத்த கரகோஷம்)
கடந்த பத்தாண்டு காலமாக விலைவாசி உயர்வு; பண வீக்கம்; பெட்ரோலியப் பொருட்களின் தொடர் விலை உயர்வு; உர விலை உயர்வு என பல்வேறு பிரச்சனைகளுக்கு நீங்கள் ஆளாக்கப்பட்டு இருக்கிறீர்கள். இதற்கெல்லாம் முக்கியக் காரணமாக விளங்குவது மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் தான்.
மத்திய அரசின் இது போன்ற தவறான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக இந்திய நாட்டில் முதலீடுகள் குறைந்துள்ளன. ஏற்றுமதி குறைந்துள்ளது. நடப்புக் கணக்கில் அதிகமான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. மொத்தத்தில் இந்தியப் பொருளாதாரமே சின்னாபின்னம் ஆக்கப்பட்டுள்ளது. அதன் சுமை ஏழைகளின் மீது சுமத்தப்பட்டுள்ளது. இந்த சுமையிலிருந்து விடுபட தேவை மாறுதல்! அதற்கு வழி வகுக்க இருப்பது வருகின்ற மக்களவைத் தேர்தல்!" என்பதை நீங்கள் மறந்துவிடாதீர்கள்.
காங்கிரசிடம் இருந்து இந்தியாவை காப்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. வரும் தேர்தல் ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் இல்லை. விடுதலைக்கான தேர்தல். பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மத்திய அரசு ஊழல் செய்துள்ளது.
மத்திய அரசு மாற்றான் தாய் மன்ப்பான்மையுடன் தமிழகத்திடம் நடந்து கொண்டது. மத்திய அரசின் ஆதரவு இல்லாத நிலையிலும் விலைவாசியை குறைக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்தது. மதிப்பு கூட்டு வரி தமிழகத்தில் முற்றிலும் நீக்கப்பட்டுவிட்டது. விரைவில் மின் உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு பெறும். இதற்கு மத்தியில் தமிழகம் இடம்பெறும் ஆட்சி அமைய வேண்டும். அப்படி அமைய வேண்டும் என்றால் தமிழகம் மற்றும் புதுவையில் மொத்தம் 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று உங்களை நான் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

.jpg)
No comments:
Post a Comment