Saturday, March 08, 2014
இலங்கை::அரசியல் சாசனத்திற்கு முரணான வகையில் அமெரிக்காவின் உத்தேச தீர்மானம் அமைந்துள்ளதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்ற உள்ளன. இந்த உத்தேச தீர்மானமானது அரசியல் சாசனத்திற்கு விரோதமான முறையில் அமைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவாவிற்கான இலங்கைப் பிரதிநிதி ரவினாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்களின் இறைமையை மீறும் வகையிலான விடயங்கள் இந்த தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். உத்தேச தீர்மானமானது பிழையான முன்னுதாரணத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அபிவிருத்தி அடைந்து வரும் உறுப்பு நாடுகளுக்கு குறுகிய மற்றும் நீண்ட கால அடிப்படையில் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய வகையிலேயே இந்த உத்தேச தீர்மானம் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உத்தேச தீர்மானமானது நாட்டின் நல்லிணக்க முனைப்புக்களை பெரிதும் பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பி;ளையின் அறிக்கையின் பரிந்துரைகளை நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.இந்த அறிக்கையில் பல்வேறு பிழைகள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கையான அரசியல் மயப்படுத்தப்பட்ட அடிப்படையில்
சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.எனவே, உத்தேச
தீர்மானமும், நவனீதம்பிள்ளையின் அறிக்கையும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில்
அமையவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:
Post a Comment