Saturday, March 8, 2014

இலங்கைக்கெதிராக இயங்கும் 24 அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பில் விசாரணை நடத்த அரசாங்கம் முடிவு!

Saturday, March 08, 2014
இலங்கை::இலங்கைக்கு எதிராக இயங்கி வரும் அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட உள்ளன. ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் அமெரிக்கா சமர்பிக்கவுள்ள இலங்கைக்கெதிரான பிரேரணைக்கு ஆதரவாக செயற்படும் இலங்கையில் 24 அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு கடந்த காலங்களில், வெளிநாடுகளில் இருந்து எவ்வளவு பணம் கிடைத்துள்ளது என்பது குறித்து விசாரணை நடத்த அரசாங்கம் தீரமானித்துள்ளது.
 
மேற்படி அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு நார்வே மற்றும் அமெரிக்காவில் இருந்து நிதியுதவிகள் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என இந்த நிறுவனங்கள் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் கோரிக்கை விடுத்துள்ளன.
 
ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மாநாட்டில், உள்நாட்டில் இயங்கி வரும் 24 அரச சார்பற்ற நிறுவனங்கள் நாட்டுக்கு எதிராக செயற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு பாரியளவில் நிதி வழங்கப்பட்டுள்ளன. அமெரிக்கா, நார்வே போன்ற நாடுகள் நிதி உதவிகளை வழங்கியுள்ளன.
 
இலங்கைக்கெதிராக போர்க் குற்றச் செயல் விசாரணைகளை நடத்துமாறு இந்த அமைப்புக்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கோரிக்கை விடுத்துள்ளன. குறித்த நிறுவனங்களுக்கு எவ்வளவு பணம் எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

No comments:

Post a Comment