Saturday, March 8, 2014

தமிழகத்தில் உள்ள 60,418 வாக்குச் சாவடிகளிலும் இந்த சிறப்பு முகாம்: விடுபட்டவர்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சோர்க்க வாய்ப்பு!

Saturday, March 08, 2014
சென்னை::வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கபடாமல் விடுபட்டவர்கள் நாளை நடைபெறும் சிறப்பு முகாமில் நேரில் சென்று பெயர்களை சேர்த்து கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் இதனை தெரிவித்தார்.
 
தமிழகத்தில் உள்ள 60,418 வாக்குச் சாவடிகளிலும் இந்த சிறப்பு முகாம் நடைபெறும் என்று அவர் கூறினார். வாக்காளர் பட்டியிலில் இடம்பெறாமல் விடுபட்டவர்கள் புதிய வாக்காளர்கள் இந்த சிறப்பு முகாமில் தங்களது பெயர்களை பட்டியலில் சேர்த்துக்கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும் என்று பிரவீண்குமார் தெரிவித்துள்ளார். பெயர்சேர்க்க விரும்புவர்கள் தங்கள் புகைப்படம், இருப்பிடச்சான்றிதழ், வயதுச் சான்றிதழ், ஆகியவற்றை கொண்டுசெல்ல வேண்டும். அதே சமயம் 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வயதுச்சான்றிதழ் கட்டாயமில்லை என்று அவர் கூறினார்.

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்குதல், திருத்தம் செய்தல் போன்றவற்றை வரும் 25-ம் தேதி வரை மேற்கொள்ளலாம் என அவர் கூறினார். மாநகராட்சிகளை சேர்ந்தவர்கள் மண்டல அலுவலகத்திலும், பிற பகுதியினர் தங்கள் வட்டாட்சியர் அலுவலகத்திலும் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment