Saturday, March 8, 2014

239 பயணிகளுடன் மலேசிய விமானம் மாயம்!

Saturday, March 08, 2014
கோலாலம்பூர்::மலேசிய தலைநகர் கோலாலம்பரில் இருந்து பீஜி்ங்க்கு சென்று கொண்டிருந்த விமானம் மாயமானது.
மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான எம்.எச் 370 வகை விமானம் ஒன்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து அதிகாலை 2.40 மணியளவில்சீன தலைநகர் பீஜிங்கிற்கு புறப்பட்டு சென்றது. விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமான ஊழியர்கள் இருந்தனர். விமானம் 4.30 மணியளவில் பீஜிங் சென்றடைய வேண்டு்ம். விமானம் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது.
தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளதால் பயணிகளின் நிலை குறித்து பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் விமானத்தை தேடும்பணியி்ல் சர்வதேச விமான ஆணையமும் ஈடுபட்டு்ள்ளது. மேலு ம் பொதுமக்கள் 60378841234 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment