Thursday, March 13, 2014
சென்னை::பா.ஜ.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நேற்று காலை தே.மு.தி.க., பா.ம.க. இரு கட்சிகளின் பிரதிநிதிகள் தி.நகர் பா.ஜ.க அலுவலகத்துக்கு பேச்சு நடத்த வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து இறுதி நிலவரம் தெரியும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதை கருத்தில் கொண்டு பா.ஜ.க. நிர்வாகிகள் அனைவரும் கமலாலயத்துக்கு வந்திருந்தனர். ஆனால் மதியம் 12.30 மணி வரை தொகுதி பங்கீடு பற்றி பேச தே.மு.தி.க., பா.ம.க. நிர்வாகிகள் வரவில்லை.
இதனால் அங்கு இருந்த பா.ஜ.க. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனை நிரூபர்களை சந்தித்து கூட்டணி நிலவரம் பற்றியும் தொகுதி பங்கீடு பற்றியும் கேட்டனர். அப்போது அவர் கூறியதா வது:_
தமிழ்நாட்டை பொருத்தவரை பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா ஒரு வலிமையான கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்த கூட்டணியே தமிழ் நாட்டின் முதல் நிலை அணியாகவும், வெற்றிக் கூட்டணியாகவும் இருக்கும்.
பல் கட்சிகளை ஒருங்கிணைத்து இத்தகைய கூட்டணி அமைக்கும்போது, தொகுதி பங்கீட்டில் தாமதம் ஏற்படுவது இயற்கையானதுதான். தி.மு.க.கூட காங்கிரசுக்காக காத்து இருப்பது போன்ற ஒரு தோற்றம் இன்னும் உள்ளது.
எங்கள் கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை 75 சதவீதம் முடிந்து விட்டது. நேற்று மாலை தே.மு.தி.க., பா.ம.க.வினருடன் மீண்டும் பேச உள்ளோம்.
இன்றிரவுக்குள் தொகுதி பங்கீடு பேச்சு சுமூகமாக நிறைவு பெறும். அதன் பிறகு பா.ஜ.க. தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் சென்னை வந்து கூட்டணி பற்றியும் தொகுதி பங்கீட்டையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்.
கேள்வி: இரட்டை இலக்க எண்ணிக்கையில் பா.ஜ.க. போட்டியிடுமா?
பதில்: 39 தொகுதிகளிலும் பா.ஜ.க. போட்டியிடுவதாகவே நாங்கள் கருதுகிறோம்.
கே: விஜயகாந்த், டாக்டர் ராமதாஸ் இருவரும் உங்களுடன் ஒரே மேடையில் பிரசாரம் செய்ய வாய்ப்புள்ளதா?
ப: அந்தந்த பகுதிகளில் உள்ள நிலைமைக்கு ஏற்ப கூட்டணி கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்வார்கள்.
கே: தமிழ்நாட்டில் மீண்டும் மோடி பிரசாரம் செய்ய வருவாரா?
ப: நிச்சயமாக தமிழ்நாட்டுக்கு மோடி மீண்டும் ஒரு தடவை பிரசாரம் செய்ய வருவார்.
கே: உங்கள் கூட்டணிக்கு தலைமை தாங்குவது யார்?
ப: தமிழகத்தையே நாங்கள்தான் ஆளப்போகிறோம்.
இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

No comments:
Post a Comment