Tuesday, March 18, 2014
சென்னை::தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 24ம் தேதி நடைபெறுகிறது. திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, அவர்களும் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். மேலும், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், கன்னியாகுமரியில் தொடங்கி தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் திமுக தலைவர் கருணாநிதி, 12 நாள் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து, திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார். ஏப்ரல் 5ம் தேதி கோவையில் அவர் தனது பிரசாரத்தை தொடங்கி 21ம் தேதி மத்திய சென்னையில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார். பிரசார விவரம் வருமாறு:
5-4-2014 இரவு 7 மணி கோவை
6-4-2014 மாலை 5 மணி திருப்பூர்

No comments:
Post a Comment