Friday, March 14, 2014

உலக உணவுத் திட்டத்துக்கு 50 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை வழங்கிய இலங்கை!

Friday, March 14, 2014
இலங்கை::உலக உணவுத் திட்டத்துக்கு இலங்கை 50 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை வழங்கியுள்ளது.
 
உலக உணவுத் திட்டத்தின் இலங்கை வதிவிடப் பிரதிநிதி இஸ்மாயில் ஒமரிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ 50 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை இலங்கையின் சார்பாக வழங்கியுள்ளார்.
2014 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டவாறு இந்த அரிசி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ, நிதியமைச்சின் செயலாளர் பேராசிரியர் பீ.பி. ஜயசுந்தர ஆகியோர் உட்பட மேலும் சில முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.


No comments:

Post a Comment