Friday, March 14, 2014

புலம்பெயர்ந்து வாழும் புலி ஆதரவாளர்கள் தொடர்ந்தும் ஈழக் கனவு காண்கிறார்கள்: நாமல் ராஜபக்ஷ!

Friday, March 14, 2014
இலங்கை::புலம்பெயர்ந்து வாழும்  புலி ஆதரவாளர்கள் தொடர்ந்தும் ஈழக் கனவு கண்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  புலிகள் வெற்றிகரமாக தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும், புலம்பெயர்ந்து வாழும் சில தரப்பினர் தொடர்ச்சியாக இலங்கை மீது யுத்தம் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

பல்வேறு வழிகளில் தமிழீழத்தை நிறுவும் நோக்கில் இவ்hறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.களனில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.புலிகளுக்கு எதிரான இராணுவ வெற்றியின் மூலம் நாட்டில் சமாதானம் நிலைநாட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

புலம்பெயர் புலி ஆதரவு தமிழர்கள் இன்னமும் ஈழக் கனவை விட்டுக்கொடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் காலணித்துவ ஆட்சியாளர்களும் புலி ஆதரவு தரப்பினருக்கு உதவிகளை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

மீண்டும் நாட்டில் வன்முறைகளை வெடிக்கச் செய்யும் நோக்கில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தீய சக்திகளுடன் சில எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இணைந்து கொண்டுள்ளமை வருத்தமளிக்கும் வகையில் அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.மக்கள் அரசாங்கத்தின் மீது வலுவான நம்பிக்கை கொண்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment