Friday, March 14, 2014

ஜெனீவா பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்முனையில் பேரணி!

Friday, March 14, 2014
இலங்கை::இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டுள்ள ஜெனீவா பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஜனாதிபதியின் செயற்பாடுகளை வரவேற்றும் கல்முனை வாழ் முஸ்லிம்களால் இன்று ஜீம்ஆ தொழுகையின் பின்னர் பேரணியொன்று இடம்பெற்றது.
                          
கல்முனை அனைத்துப்     பள்ளிவாசல்கள் வாசல்கள் சம்மேளனத் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் தலைமையில் இவ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கல்முனை முகைதீன் ஜீம்ஆபள்ளியிலிருந்து ஆரம்பமான
 
பேரணி கல்முனை பிரதேச செயலகத்தை வந்தடைந்தது.
ஜனாதிபதியின் முஸ்லிம் விவகார ஆலோசகர் மசூர் மௌலானா , சுதந்திரக் கட்சியின் கல்முனை அமைப்பாளர் மாநகர சபை உறுப்பினர் பெஸ்டர் றியாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டர்.

No comments:

Post a Comment