Thursday, March 13, 2014

40 தொகுதிக்கான தேர்தல் பொறுப்பாளர்கள்: திமுக அறிவிப்பு!

Thursday, March 13, 2014
சென்னை::தமிழகம் மற்றும் புதுச்சேரியின் தேர்தல் பொறுப்பாளர்களை திமுக அறிவித்துள்ளது.அதன்படி திருவள்ளூர் தொகுதிக்கு ப.ரங்கநாதனும் மத்திய சென்னைக்கு பி.கே. சேகர்பாபுவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
தருமபுரி தொகுதி பொறுப்பாளராக செல்வகணபதியும் சேலம் தொகுதிக்கு சுப்புலட்சுமி ஜெகதீசனும் பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
 
கரூர் தொகுதிக்கு கே.சி. பழநிச்சாமியும், விருதுநகர் தொகுதிக்கு சேடப்பட்டி முத்தையாவும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார். தென்காசி தொகுதிக்கு டி.பி.எம். மைதீன் கான், கன்னியாகுமரி தொகுதிக்கு ஆவுடையப்பன், புதுச்சேரி தொகுதிக்கு கடலூர் இரா. புகழேந்தியும் தொகுதி பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment