Sunday, March 16, 2014
ராமேஸ்வரம்::ராமேஸ்வரத்தில் இருந்து கச்சத்தீவு
அந்தோணியார் சர்ச் விழாவுக்கு, 3160 பக்தர்கள் சென்றனர். கச்சத்தீவு
அந்தோணியார் சர்ச் திருவிழா நேற்று துவங்கி, இன்று முடிவடைகிறது.
இதில்
பங்கேற்க தமிழக, கேரளா, கர்நாடகா சேர்ந்த 3,432 பேர் விண்ணப்பித்தனர்.
நேற்று, ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்ட 95 விசைப்படகுகளில், 2,466
ஆண்கள், 528 பெண்கள், 166 சிறுவர், சிறுமிகள் என, 3,160 பேர் சென்றனர்.
இவர்களை வருவாய், சுங்கத்துறை அதிகாரிகள், மற்றும் உளவு பிரிவு போலீசார்
தீவிர சோதனைக்கு பின்னரே, அனுமதித்தனர்.ராமேஸ்வரத்தில் இருந்து இந்திய கடல்
எல்லை(18 கி.மீ. தொலைவு) வரை, இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல் படை,
தமிழக மெரைன் போலீசார் ரோந்து கப்பல், படகுகளில் கண்காணித்தனர். படகுகளை
நடுக் கடலில் சோதனை செய்து, அனுப்பினர்.
கோவை பக்தர் ஜீ.லூயிஸ், 55,
கூறியதாவது: கடந்த 100 ஆண்டுகளாக நடக்கும் விழாவில், இருநாட்டு பக்தர்களும்
பங்கேற்று உரையாட உள்ள நிகழ்வு, தொப்புள் கொடி உறவுகளை சந்திக்கும் உணர்வு
போன்றது, என்றார்.
தடை : இலங்கை தூதரகத்திடம் அனுமதி பெறாமல், விழாவுக்கு சென்ற புகைப்படக்காரர்களின் வீடியோ, டிஜிட்டல் கேமராவை போலீசார் அனுமதிக்கவில்லை.
இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி தெட்சிணாமூர்த்தி இருவரும், விழாவில் பங்கேற்க போலீசார் தடை விதித்தனர்.
போலீசார் சோதனைக்காக வெகு நேரம் காத்திருந்த பக்தர்களுக்கு, போதுமான பந்தல், குடிநீர் வசதி செய்யாததால், வெயில் நின்று அவதிப்பட்டனர்.

No comments:
Post a Comment