Wednesday, March 12, 2014
நாகை::இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பதில் அந்நாட்டு அரசு முடிவு எதுவும் அறிவிக்கவில்லை. அவர்களை விடுவித்தால்தான் 2ம் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியும் என்று தமிழக அரசும் தெரிவித்துள்ளதால், இருநாட்டு மீனவர் பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொழும்பில் நாளை தமிழக, இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை நடைபெறாது என தெரிகிறது.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி, அவர்களின் உடமைகளை பறிப்பதும், சிறைபிடித்து செல்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு, தமிழக மீனவர்கள் கடல் எல்லையைத் தாண்டிச் செல்வதாக காரணம் சொல்லப்படுகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண இரு நாட்டு மீனவர்கள் பிரதிநிதிகளும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இந்திய - இலங்கை மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தையில் தமிழகம் சார்பில் 12 மீனவ பிரதிநிதிகளும், புதுச்சேரியை சேர்ந்த ஒருவரும், இலங்கையை சேர்ந்த 10 மீனவ பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எடுக்கப்பட்டதாக இரு தரப்பிலும் கூறப்பட்டது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை இலங்கையில் நடைபெறும். அதுவரை தமிழக மீனவர்கள் எல்லை தாண்டக்கூடாது, கைது நடவடிக்கை கூடாது என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து சிறைபிடித்து சென்றனர். தற்போது இலங்கை சிறையில் 177 தமிழக மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, அடுத்த கட்ட பேச்சுவார்த்தை இலங்கை தலைநகர் கொழும்புவில் 13ம் தேதி நடைபெறும். சென்னை பேச்சுவார்த்தையில் பங்கேற்ற தமிழக மீனவ பிரதிநிதிகளே இதிலும் கலந்து கொள்வார்கள் என்று கடந்த 2ம் தேதி முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இலங்கையில் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், தற்போது தமிழக அரசு சார்பில் இன்று காலை வரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
அதே சமயம், தமிழக மீன்வளத் துறை செயலாளர் விஜயகுமார், மத்திய அரசு வெளியுறவுத் துறை இணை செயலாளர் சுசித்ரா துரைக்கு நேற்றிரவு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ‘தமிழக மீனவர்கள் 177 பேர் விடுவிக்கப்பட்டால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த முடியும்’ என குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் கூறுகையில், ‘இலங்கையில் உள்ள தமிழக மீனவர்கள் 177 பேரையும் விடுதலை செய்வதோடு, 44 விசைப்படகுகளையும் விடுவித்தால்தான், அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள முடியும் என முதல்வர் கூறியுள்ளார். இதற்கு ஒரு நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்’ என்றார்.
இலங்கை மீன்வளத்துறை இயக்குனர் நிமல் ஹெட்டியரச்சி கூறுகையில், ‘கொழும்புவில் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம். இதில் கலந்து கொள்ளும் மீனவ பிரதிநிதிகள் பட்டியலை தமிழக அரசு இதுவரை அளிக்கவில்லை. இதுகுறித்து இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் கேட்டதற்கு அவர்களும், தங்களுக்கும் தகவல் வரவில்லை என்று கூறினார்கள். ஆனால் புதுச்சேரி அரசு, அவர்கள் அனுப்பும் மீனவ பிரதிநிதிகள் பட்டியலை அனுப்பியிருக்கிறது. பேச்சுவார்த்தை நடைபெறுமா என தெரியாது‘ என்றார்.
இந்நிலையில், புதுகை மாவட்டம் ஜெகதாபட்டினம் விசைபடகு மீனவர் சங்க தலைவர் குட்டியாண்டி, முன்னாள் தலைவர் ராமகிருஷ்ணன், தஞ்சை ராஜமாணிக்கம் ஆகியோர் கூறுகையில், ‘2ம் கட்ட பேச்சுவார்த்தை குறித்து இதுவரை எங்களுக்கு அழைப்பு வரவில்லை. ஆனால், எங்களது பாஸ்போர்ட்களை மீன்வளத்துறை அதிகாரிகள் வாங்கியுள்ளனர். நாங்கள் செல்வதற்கு தயாராகவே இருக்கிறோம்’ என்றனர்.
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிப்பதில் அந்நாட்டு அரசு முடிவு எதுவும் கூறவில்லை. தற்போதைய நிலையில், இருதரப்பிலும் இழுபறி நீடிப்பதால், நாளை கொழும்புவில் திட்டமிட்டபடி பேச்சுவார்த்தை நடக்காது என தெரிகிறது.

No comments:
Post a Comment