Monday, March 17, 2014
புதுடெல்லி:ஆம் ஆத்மி பாணியில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி மக்கள் மத்தியில் சென்று நேரடியாக பேசி பிரசாரம் செய்து வருகிறார். ராகுலின் இந்த பாணியை பின்பற்றி 100 காங்கிரஸ் வேட்பாளர்கள் தொகுதியில் ஏழை மக்களை சந்தித்து பேச வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி உத்தரவிட்டுள்ளது.

ஆம் ஆத்மியின் தலைவர் கெஜ்ரிவால் ஜனதா தர்பார் என்ற பெயரில் மக்களை நேரடியாக சந்தித்து கலந்தாலோசனை செய்து அவர்களது குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டு வருகிறார். இதனால் ஆம் ஆத்மி கட்சிக்கு பரவலான ஆதரவு கிடைத்து வருகிறது. ஆனால் காங்கிரஸ், பாஜ உள்ளிட்ட தேசிய கட்சிகளும், மாநில அளவிலான கட்சிகளும் மக்களிடம் இருந்து தள்ளி வெகுதொலைவில் மேடை அமைத்து பிரசாரம் செய்து வருகின்றன. ஆம் ஆத்மி உத்தியை பயன்படுத்தி ராகுல் காந்தி தொழிலாளர்கள், ஏழை மக்கள், வறுமைக் கோட்டிற்கு கீழே வசிக்கும் மக்கள் ஆகியோரை நேரடியாக சந்தித்து பேசி வருகிறார்.
டெல்லியில் ரயில்வே தொழிலாளர்களையும், குஜராத்தில் உப்பளத் தொழிலாளர்களையும், மகாராஷ்டிராவில் அங்கன்வாடி பணியாளர்களையும் ராகுல் நேரடியாக சந்தித்து பேசினார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் ஜனார்த்தனன் திவேதி கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடு முழுவதும் உள்ள குறிப்பிட்ட 100 காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் சைக்கிள் ரிக்ஷா இழுப்பவர்கள், ரயில்வே சுமை தொழிலாளர்கள், ஏழை மக்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளிட்டோரை வேட்பாளர்கள் நேரடியாக சந்தித்து உரையாடும் வகையில் குறைந்தது இரண்டு கூட்டங்களை ஏற்பாடு செய்யும்படி அதில் உத்தரவிட்டுள்ளார்.

மத்திய அமைச்சர்களான அஜய் மக்கான், சந்தீப் தீட்சித் ஆகியோர் டெல்லியிலும், சசிதரூர் திருவனந்த புரத்திலும், மிலின்ட் தியோரா தெற்கு மும்பையிலும், அதிகமான ஏழை மக்களை கொண்ட தொகுதியான உன்னோவ் தொகுதியில் அனு தான்டனும், ரோட்டக்கில் புபேந்தர் ஹூடாவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற உத்தரவின் கீழ் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
ரயில்வே இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக இதன் முன்னோட்டமாக டெல்லியில் ரயில்வே தொழிலாளர்களை ராகுல் சந்தித்து உரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் சுமார் 70 கோடி வாக்காளர்களை காங்கிரஸ் கட்சி கவர்ந்திழுக்க திட்டமிட்டுள்ளது என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:
Post a Comment