Monday, March 17, 2014
இலங்கை::யாழ். நகரை அண்மித்த பகுதிகளில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து ஆபாச சிடிக்களை விற்பனை செய்த இரண்டு விற்பனை நிலையங்களை இன்று மதியம் பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
பொலிஸார் மேற்கொண்ட இந்த அதிரடி நடவடிக்கையின்போது, அங்கிருந்து இருபதுக்கும் மேற்பட்ட இருவெட்டுக்களை கைப்பற்றிய பொலிஸார், அங்கிருந்த இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர்.
யாழ். நாவலர் வீதியிலுள்ள பிரசித்தி பெற்ற தனியார் கல்வி நிலையமான பொருளியல் கல்வி நிலையத்திற்கு முன்னாலும் மற்றொரு பிரசித்தி செற்ற தனியார் கல்வி நிலையமான சயன்ஸ்கோல் ஆகிய இரண்டு நிலையங்களின் முன்னாலும் சிடி, விற்பனை செய்யும் இரண்டு கடைகள் இயங்கி வந்தது.
இந்த இரண்டு கடைகள் தொடர்பாகவும் யாழ். பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து, மாவட்ட பொலிஸ்மா அதிபரின் விசேட பொலிஸ் பிரிவினர் இன்று மதியம் திடீர் சுற்றுவளைப்பில் ஈடுபட்டனர்.
இதன்போதே அங்கிருந்த இருபதுக்கும் மேற்பட்ட ஆபாச சிடிக்களை கைப்பற்றிய பொலிஸார், இந்த விற்பனை நிலையத்திலிருந்த இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment