Friday, February 7, 2014

இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்களில் இலங்கை மாணவர் படையணியினர்

Friday, February 07, 2014
இலங்கை::இலங்கை மாணவர் படையணியின் ஒரு குழுவினர் அண்மையில் (ஜன.26) புதுடில்லியல் இடம்பெற்ற இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்றனர். சார்க் நாடுகளுக்கிடையே இளைஞர்களின் பரஸ்பர பரிமாற்றத் திட்டத்தின் கீழ் ஆறு ஆண்களையும் ஆறு பெண்களையும் கொண்டதாக இக்குழு இந்தியாவுக்கு விஜயத்தை மேறகொண்டிருந்தது.
 
இக்குழுவுக்கு தேசிய மாணவர் படையணின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் எச்.எம்.எச்.ஏ ஹேரத் தலைமைதாங்கியதுடன் இக்குழுவினர் இந்திய ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு அமைச்சர், முப்டைத்தளபதிகள் மற்றும் பல பிரமுகர்களையும் சந்தித்தனர்.
 
அத்துடன் அவர்கள் இந்தியா, இலங்கை, நேபாளம், பூட்டான், ரஸ்யா, கசகஸ்தான், ஆப்கானிஸ்தான், வியட்னாம், பங்களதேஸ் போன்ற நாடுகளின் கலாச்சார நிகழ்வுகளிலும் பங்கேற்றனர். 

No comments:

Post a Comment