Friday, February 21, 2014

வட மாகாண மேல் நீதிமன்ற நீதிபதியாக அன்னலிங்கம் பிரேம்சங்கர் நியமனம்

Friday, February 21, 2014
இலங்கை::யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியாகக் கடமையாற்றிய அன்னலிங்கம் பிரேம்சங்கர், நேற்று பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ் முன்னிலையில் வட மாகாண மேல் நீதிமன்ற நீதிபதியாக நேற்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
 
மேலும் யாழ். குடியியல் மேன் முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதிகளாக அன்னலிங்கம் பிரேம்சங்கர், முகமட் மக்கி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
 
திருகோணமலை குடியியல் மேன் முறையீட்டு ஆணையாளராக கடமையாற்றி, மா.இளஞ்செழியன் கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டு சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
 
இவர்களுடன் டபிள்யு.பி.வெப் பிரதீப் கெட்டியாராச்சி, சுமுது பிரேமச்சந்திர ஆகியோர்களும் முறையே பொலன்னறுவை, திருகோணமலை குடியியல் மேன் முறையீட்டு மேல் நீதிமன்றம், அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
மேற்குறித்த நியமனங்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் இந்த மாதம் 20ம் தேதி முதல் அமுல்படுத்தும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. புதிய நீதிபதிகள் அனைவரும் பிரதம நீதியரசர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்தனர்.
 
இதனைத் தொடர்ந்து பிரதம நீதியரசரினாலும், ஏனைய நீதியரசர்கள், நீதிபதிகள், சட்ட வல்லுனர்களினாலும் வாழ்த்தப்பட்டு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.
 

No comments:

Post a Comment