.jpg)
இலங்கை::யாழ்ப்பாணத்தில் புலிகளுடன் நடந்த மோதலில் உயிரிழந்த இந்திய இராணுவத்தினருக்கு இலங்கை இராணுவத்தின் பலாலி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் நேற்று காலை அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்தியாவின் தெற்கு பிராந்திய கட்டளைத் தளபதி லெப்டினட் ஜெனரல் அசோக் சிங் உள்ளிட்ட இராணுவ அதிகாரிகள் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு இந்த அஞ்லியை செலுத்தினர்.
இந்தியாவின் தெற்கு பிராந்திய கட்டளைத் தளபதி லெப்டினட் ஜெனரல் அசோக் சிங் உள்ளிட்ட இராணுவ அதிகாரிகள் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு இந்த அஞ்லியை செலுத்தினர்.
கொழும்பிலிருந்து விமானம் மூலமாக பலாலியை வந்திறங்கிய மேற்படி இராணுவத் தளபதிக்கு பலாலி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் இராணுவ மரியாதை அளிக்கப்பட்டதுடன், செங்கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேராவைச் சந்தித்தும் பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடினார்.
இதனைத் தொடர்ந்து கடந்த 1987ம் ஆண்டு இந்தியா இராணுவம் இங்கு நிலை கொண்டிருந்த காலப்பகுதியில் புலிகளுடன் நடந்த மோதலில் உயிரிழந்த இராணுவத்தினரின் நினைவாக பலாலியில் அமைக்கப்பட்ட நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தினர்.
இதன்போது, இந்திய இலங்கை இராணுவ அதிகாரிகள் மற்றும் யாழிலுள்ள இந்திய துணைத்தூதுவர் வி.மகாலிங்கம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிரந்தனர். இதேவேளை மேற்படி குழுவினர் நல்லூர் ஆலயம், கோட்டை ஆகியவற்றிற்கும் சென்றிருந்தனர்.














.jpg)
.jpg)
.jpg)

.jpg)
.jpg)
.jpg)
No comments:
Post a Comment