Friday, February 21, 2014
சென்னை::ராஜிவ் கொலையாளிகளை, விடுதலை செய்யக் கூடாது என, மத்திய அரசு
தொடர்ந்துள்ள வழக்கில், எங்களையும், மனுதாரராக சேர்க்க மனு செய்ய உள்ளோம்'
என, ராஜிவ் படுகொலை நடந்தபோது, பலியான, 14 பேரில், மூவர் குடும்பத்தினர்
கூறினர்.
காங்., தலைவர் : தமிழக காங்., செய்தித் தொடர்பாளர், அமெரிக்கை நாராயணன் தலைமையில், ராஜிவ் படுகொலையின் போது உயிரிழந்தோரின் குடும்பத்தினர் பத்திரிகையாளர்களை சந்திக்கும் கூட்டம், சென்னை பத்திரிகையாளர் சங்க அரங்கில், நேற்று மாலை நடந்தது. ராஜிவ் படுகொலையின் போது உயிரிழந்த, காங்., முன்னாள், எம்.எல்.சி., லீக் முனுசாமியின் மகன், லீக் மோகன்; செங்கல்பட்டு தெற்கு மாவட்ட மகளிர் காங்., தலைவர், சம்தானி பேகத்தின் மகன் அப்பாஸ்; சப் - இன்ஸ்பெக்டர் எட்வர்ட் ஜோசபின் சகோதரர், ஜான் ஜோசப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அவர்கள் கூறியதாவது: லீக் மோகன்: என்னுடன் பிறந்த வர்கள், ஆறு பேர். புலிகளினால் ராஜிவ் கொல்லப் பட்ட சம்பவத்தில், என் தந்தை இறந்த பின், எங்களுக்கு ஆதரவு இல்லை. உடன் பிறந்தவர்களை வளர்த்து ஆளாக்க வேண்டிய பொறுப்பு, என் தாய் மற்றும் எனக்கு ஏற்பட்டது. எனக்கு அப்போது வயது, 41. தந்தை இறந்த பின், காங்., கட்சி, எங்கள் குடும்பத்துக்கு, காஸ் ஏஜன்சி உரிமம் வழங்கியது. இருப்பினும், என்னுடன் பிறந்தவர்கள், தந்தை இல்லாமல், பெரும் போராட்டங்களுக்குப் பின், வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது.

எங்களைப் பொறுத்தவரை, கொலையாளிகளுக்கு
மன்னிப்பு வழங்கக் கூடாது. விதிக்கப்பட்ட தண்டனையை, அவர்கள் முழுமை யாக
அனுபவிக்க வேண்டும். இல்லையேல், உயிரை பறிகொடுத்த எங்கள் குடும்பங்களுக்கு,
நீதி கிடைக்காது. அப்பாஸ்: என் தாய் இறக்கும்போது, எனக்கு 10 வயது. தாயின்
பாசம் என்னவென்றே தெரியாமல் வளர்ந்தேன். இப்போது, மொபைல் போன் கடை நடத்தி
வருகிறேன். தாய் இல்லாமல், நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும்.
குற்றங்கள் பெருகும் : குற்றவாளிகளை தண்டிப்பதால், என் தாய் திரும்ப வந்துவிட மாட்டார். ஆனால், முன்னாள் பிரதமரை கொலை செய்தவர்களுக்கு, தண்டனை கிடைக்கவில்லை என்றால், சமூகத்தில் குற்றங்கள் பெருகும். இதுபோன்ற படுகொலைகள் தொடரும். அதனால், கொலையாளிகள் உரிய தண்டனையை அனுபவிக்க வேண்டும். ஜான் ஜோசப்: என் சகோதரர், இரு பெண் குழந்தைகளை விட்டு விட்டு சென்று விட்டார். அவர்களின் எதிர்காலம், கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டது. அவரது குழந்தைகளை, நாங்கள் தான் வளர்த்தோம். தந்தை இல்லாமல், இரு பெண் குழந்தைகள், இந்த சமூகத்தில் வளர்வது, எப்படிபட்ட கொடூரம் என்பது, அனுபவித்தவர்களுக்கே தெரியும்.
சட்ட நடவடிக்கைக்கு... : கொலையாளிகளுக்கு அளிக்கப் பட்ட தண்டனை, குறைக்கப்பட்டுள்ளது; அந்த தண்டனையை, அவர்கள் அனுபவிக்க வேண்டும். தண்டனையைக் குறைப்பது முறையற்றது.

அவர்களை
விடுதலை செய்வது, சமூகத்திற்கு, பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். குற்றவாளிகள்
எந்த அச்சமும் இல்லாமல், சமூகத்தில் நடமாடுவது, படுபாதகச் செயல்களை
தூண்டுவதாகும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
பின், மூவரும் சேர்ந்து
கூறுகையில், "ராஜிவ் கொலையாளி களை விடுவிக்கும் அறிவிப்பை எதிர்த்து, உச்ச
நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், எங்களையும் மனுதாரராக சேர்க்க முடிவு
செய்துள்ளோம். மார்ச் 6ம் தேதிக்கு, வழக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
அதன்பின், ஏற்படும் சூழ்நிலையைப் பார்த்த பின், எங்களது மனுவை, உச்ச
நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம்' என்றனர். ""இவர்களின் சட்ட
நடவடிக்கைக்கு, காங்., உதவி செய்யும். தேவையான நிதியையும் வழங்குவோம்,''
என, அமெரிக்கை நாராயணன் கூறினார்.

No comments:
Post a Comment