Monday, February 24, 2014

இந்தியாவின் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரிப்பு!

Monday, February 24, 2014
இலங்கை::இந்தியாவின் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. அமெரிக்காவுடன் இணைந்து செயற்படுமாறு இந்தியா, இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானம் தொடர்பில் இவ்வாறான கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
எனினும், அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட முடியாது என இலங்கை அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் தீர்மானத்தை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
மேற்குலக நாடுகளின் அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படத் திட்டமிடப்பட்டுள்ளது அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் 74 அம்ச அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் பதிலளித்துள்ளதாக Colombo  ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 

No comments:

Post a Comment