Monday, February 24, 2014

20 கிலோ தங்கம் கடத்தல் : இலங்கை நபர்கள் கைது!

Monday, February 24, 2014
புதுடில்லி::டில்லி விமான நிலையத்தில், இலங்கையைச் சேர்ந்த இருவரிடமிருந்து, 20 கிலோ தங்க கட்டிகளை, சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
 
மும்பையிலிருந்து, டில்லி வந்த விமானத்தில் இருந்து இறங்கியவர்களின் உடமைகளை, டில்லி விமான நிலையத்தில், சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, இலங்கையைச் சேர்ந்த இருவர், தங்க கட்டிகளை, மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 
அவர்களிடமிருந்து, 20 கிலோ தங்க கட்டிகள் கைப்பற்றப்பட்டன. இவற்றின் மதிப்பு, ஐந்து கோடி ரூபாய். இதுகுறித்து, சுங்கத் துறை அதிகாரிகள் கூறுகையில்,""இந்த விமானம், ஓமன் நாட்டிலிருந்து, மும்பை வழியாக, டில்லி வந்தது. தங்கத்தை கடத்தி வந்த, இந்த இருவரும், மும்பையில் விமானத்தில் ஏறியுள்ளனர். சிலரின் உதவியுடன், தங்கள் இருக்கைகளுக்கு அடியில், தங்கத்தை மறைத்து எடுத்து வந்துள்ளனர்,'' என்றார்.
 
 

No comments:

Post a Comment