Sunday, February 23, 2014

இத்தாலியில் உள்ள இந்திய தூதரகத்துக்கு மிரட்டல் கடிதம்!

Sunday, February 23, 2014
புதுடெல்லி::இத்தாலியிலுள்ள இந்தியத் தூதரகத்துக்கு துப்பாக்கித் தோட்டாவுடன், வெறுப்பை உமிழும் கடிதமும் மர்ம நபரால் அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து, தூதரகத்துக்கு அரிய பாதுகாப்பை இத்தாலி அரசு வழங்க வேண்டுமென்று இந்தியா வலியுருத்தியுள்ளது.
 
இதுகுறித்து இந்தியா வெளியுறத்துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், இதுபோன்ற சம்பவங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஜெனிவா உடன்படிக்கையின்படி தூதரகத்துக்கு உரிய பாதுகாப்பை அளிப்பது இத்தாலியின் கடமையாகும் என்றார். 
இந்திய மீணவர்கள் இருவரை சுட்டுக் கொன்றதாக இத்தாலிய கடறபடை வீரர்கள் இருவர் மீது இந்தியாவில் நடைபெற்று வரும் வழக்கு காரணமாக, இரு நாடுகளுக்குமிடையே பதற்றம் நிலவி வருவது குறப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment