Sunday, February 23, 2014
இலங்கை::போராட்டங்களை நடத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். வெலிகம பிரதேசத்தில் போராட்டம் நடத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெலிகம பிரதேச சபையின் பணியாளர்கள் நேற்று காவல்துறையினருக்கு எதிராக போராட்டம் நடத்தியிருந்தனர். வெலிகம பிரதேச சபையின் வாகனமொன்று தேர்தல் பணிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை காவல்துறையினர் கைப்பற்றியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வாகனத்தை கைப்பற்றியமைக்காக பணியாளர்கள் எதிர்ப்பு போராட்டத்தை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. போராட்டங்களை நடத்தும் பணியாளர்களுக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படுமென தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment