Sunday, February 23, 2014

இலங்கையிலிருந்து கடத்தி வந்த 35 கிலோ தங்க கட்டியுடன் இருவர் கைது!

Sunday, February 23, 2014
ராமேசுவரம்::இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட தங்க கட்டியுடன் இருவரை மண்டபம் கடலோர போலீஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மண்டபம் கடலோரப் போலீஸார் சனிக்கிழமை மாலையில் மண்டபம், பாம்பன் கடலோரப்பகுதிகளில் ஆய்வாளர் குமரவேல் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் கணேசன் தலைமையில்  ரோந்து பணிக்கு சென்றனர்.அப்போது உயர் அதிகாரிகளின் ரகசிய தகவலின் படி பாம்பன் தெற்கு கடற்கரைப்பகுதியில்  தீவிரமாக கண்காணித்து வந்தனர்.அப்பகுதியில் சந்தேகத்தின்பேரில் திரிந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்துள்ளனர்.அப்போது அவர்கள் அப்பகுதியில் தங்க கட்டியை  மூன்று துணிப்பையில்  பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.போலீஸார் தங்ககட்டியை கைப்பற்றி இருவரையும் கைது செய்து மண்டபம் கடலோர காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
 
அங்கு போலீஸார் அவர்களை மேற்கொண்ட விசரணையில் ராமேசுவரம் நடராஜாபுரம் பகுதியை சேர்ந்த நடராஜன் மகன் தமிழரசு(42),  வேதாளை பகுதியை சேர்ந்த சின்னத்துரை மகன் காளிதாஸ்(34)  என்றும்,இவர்கள் தங்க கட்டியை இலங்கையை சேர்ந்த ஜாதிக் என்பவர் பிளாஸ்டிக் படகில் வந்து வெள்ளிக்கிழமை இரவு தனுஸ்கோடி கடல் பகுதியான 6 தீடையில் கூடுத்து விட்டு சென்றுள்ளார். அதை நாட்டு படகில் கொண்டு வந்து தமிழரசு என்பவரின் வீட்டில் வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.  இருவரும் சனிகிழமை தங்க கட்டியை ராமேசுவரத்திலிருந்து மதுரைக்கு மாலையில் 6 மணிக்கு  செல்லும் ரயில் பயணிகள் வண்டியில் பாம்பன் ரயில் நிலையத்திலிருந்து  கடத்தி மதுரையை சேர்ந்த முகைதீன் என்பவரின் விற்பனைக்கு கூடுப்பதற்காக வைத்திருந்ததாக தெரிவித்துள்ளனர். போலீஸார் மதிப்பீடு செய்த போது 35 கிலோ எடையும் இதன் இந்திய நாட்டு ரூபாய் 11 கோடி எனவும் தெரியவந்துள்ளது.பல கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் பொருளுக்கு மேற்கொண்டு தொடர்பு உள்ளார்களாக என போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். 
 35 கிலோ,11 கோடி மதிப்புள்ள  தங்கம் கட்டியை ராமேசுவரம் கடலோரப்பகுதி வழியாக கொண்டு வந்து இரவு பகலாக கடத்தல்காரர்கள் வீட்டில் பதுக்கி வைத்துள்ளனர். 24 நான்கு மணி நேரத்திற்குமேல் பதுக்கி வைத்திருந்த தங்ககட்டியை கண்டுபிடிக்கமுடியாமலும் இதற்கு முன்னதாக சில மாதங்களுக்கு முன் ராமேசுவரம் பகுதியிலிருந்து இலங்கை கடத்திய பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டியையும் பிடிக்கமு
டியாமலும் உளவுத்துறை போலீஸார் கோட்டை விட்டது ராமேசுவரம் பகுதி பொது மக்களிடம் பெறும் பரபரப்பையும்,அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment