Saturday, February 22, 2014

சட்டம் ஒழுங்கை பின்பற்றுவதன் ஊடாகவே விபத்துக்கையும் குற்றங்களையும் குறைக்க முடியும்: பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோகன!

Saturday, February 22, 2014
இலங்கை::அண்மைக்காலமாக சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் அதிகப்படியான விபத்துக்களும் குற்றங்களும் இடம்பெறுகின்றன. இதன் காரணமாக பொறுமதி மிக்க உயிர்களும் சொத்துக்களும் இழக்கப்படுகின்றன இப்படியான நிலையில் போலீசார் மேற்படி இழப்புக்களை தவிர்ப்பதற்காக பல்வேறுபட்ட  நடவடிக்கைகளை எடுத்துவருகின்ற போதிலும் விபத்துக்களும் குற்றங்களும்  குறைந்ததாக தெரியவில்லை இதன் அடிப்படையில் பொலிஸ் ஊடக பிரதம பேச்சாளரான சட்டத்தரணி அஜித் ரோகனவிடம்  பிரத்தியோகமாக கேள்விகளைக்கேட்ட போது அவர் பின்வருமாறு பதிலளித்தார்.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவின் விஸ்தீரணம் மற்றும் சனத்தொகை பற்றி கேட்டபோது சம்மாந்துறை பொலிஸ் பிரிவு,  இலங்கையில் உள்ள பொலிஸ் பிரிவுகளில் மிகவும் பெரியது என்றும் இங்கு 96 கிராம சேவகர் பிரிவுகளும் 04 பிரதேச செயலாளர் பிரிவுகளும் அதாவது சம்மாந்துறை, நிந்தவூர், காரைதிவு மற்றும் நாவிதன்வெளி இருப்பதாகவும் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் மக்கள் வசிப்பதாகவும் குறிப்பிட்டார்.

பெரிய பரப்பளவைக்கொண்டு  சம்மாந்துறை பொலிஸ் பிரிவு இயங்குவதால் உடனடியாக மக்களுக்கு பொலிசாரின் சேவையை பெறுவதில் சிக்கல் நிலவுவதாகவும் இப்படியான சூழலில் இப்பிரச்சினையை தீர்ப்பதற்காக நிந்தவூரை உள்ளடக்கியதாக ஒரு பொலிஸ் நிலையமும் பின்னர் நாவிதன்வெளியை உள்ளடக்கியதாக சவளக்கடையுடன் இணைந்ததாக ஒரு பொலிஸ் நிலையமும் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஒன்றாக இருக்கும் சம்மாந்துறை பொலிஸ் பிரிவு பிரிக்கப்படும் போது பொலிஸ் பிரிவுகளின் எல்லைகள் சுருங்குவதால் மக்களுக்கு உடனடியான சேவையை வழங்க முடியும் என்றும் தெரிவித்தார்.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவின் அதிகப்படியான விபத்துக்கள் ஏற்படுகிறதே அதனை தடுப்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என வினவிய போது இப்பிரதேசத்தில் வசிக்கும் சில வாகன ஓட்டுனர்களும் ஏனையோரும் சில சந்தர்ப்பங்களில் பொறுமையற்றவர்களாகவும் சட்டத்தையும் ஒழுங்கையும் மதிக்கதவர்களாகவும் காணப்படுவதாலேயே அதிக விபத்துக்களும் குற்றங்களும் ஏற்படுகின்றன.

இவ்வாறானவர்களை பொலிசார் நேரடியாகவும் சிவில் பாதுகாப்பு குழுக்கள் ஊடாகவும் நல் நிலைப்படுத்துவதற்காக முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இலங்கையில் அதிகப்படியான விபத்துக்கள் சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இடம்பெறுவதாக அறிய முடிகிறது இது உண்மையாயின் கடந்த வருடம் எவ்வாறான விபத்துக்கள் இடம்பெற்றன அதில் எத்தனை உயிர்கள் காவு கொள்ளப்பட்டன? ஏனைய பிரதேசங்களுடம் ஒப்பிட்டு கூறுங்கள்? எனக்கேட்டோம்

அதற்க்கு பதிலளித்த பொலிஸ் ஊடக பிரதம பேச்சாளரான சட்டத்தரணி அஜித் ரோகன ஏனைய பொலிஸ் நிலையங்களுடன் ஒப்பிடும் போது சம்மாந்துறை பிரிவில் அதிகளவான விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கடந்த 2012ல் நிந்தவூரில் முச்சக்கரவண்டியில் பயணித்த 06 பேர் பஸ் ஒன்றுடன் மோதுண்டு இறந்ததாகவும் அண்மையில் கூட முச்சக்கரவண்டி ஒன்று டிப்பர் ரக வாகனம் ஒன்றுடன் மோதுண்டதில் இங்கும் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
 
சாதாரணமாக சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் வருடத்துக்கு 11முதல் 15பேர் வரை உயிரிளப்பதாகவும் பெரும் எண்ணிக்கையிலானோர் காயங்களுக்கு உள்ளாவதாகவும் இவைகளை கட்டுப்படுத்த பொலிசாரினால் மட்டும் முடியாது என தெரிவித்த அவர் மக்களும் பொலிசாருடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
 
உள்வீதிகளில் அதிகப்படியான விபத்துக்கள் ஏற்படுகின்றதாகவும் அதற்க்கு வாகன அனுமதிப்பத்திரம் இல்லாது வாகனங்களை செலுத்துதலும் சட்டம் ஒழுங்கை மதிப்யாது விசேடமாக மனிதத்துவத்துக்கு மதிப்பளிக்காது நடந்து கொள்வதாலும் இவ்வாறான நிலை ஏற்பட்டுவதாகவும் தெரிவித்தார்.
சம்மாந்துறை பொலிஸ் பிரிவை பொறுத்தமட்டில் பொலிசாரிடம் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றங்களில் 100க்கு 50 வீதமான குற்றங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் குற்றங்களை குறைப்பதற்காக உச்ச நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

குற்றங்களைக் குறைக்க பொலிசாரால் எவ்வளவுதான் நடவடிக்கைகளை எடுத்தபோதிலும் பிரதேச மக்களும் சமூகத்தலைவர்களும் ஒத்துழைக்காது போனால் அந்தப்பணியை முன்கொண்டு செல்வது கடினமான விடையம் என்றும் தெரிவித்தார்.
சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் வாழும் மக்களுக்கு விபத்து மற்றும் குற்றங்களை குறைப்பது சம்மந்தமாக ஏதாவது விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளதா? என வினவிய போது

தெரிவு செய்யப்பட்ட சிவில பாதுகாப்பு குழுக்கள் ஊடாகவும் மதத்தலைவர்கள் ஊடாகவும் மக்களுக்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பாடசாலைகளில் மாணவர்களுக்கும் மற்றும் பொது நிறுவனங்களிலும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

சம்மாந்துறை பொலிஸ் நிலையம் மிகப்பழமையானதாக இருக்கிறதே அதனை புனர்நிர்மாணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா? என வினவிய போது சம்மாந்துறை பொலிஸ் நிலையம் பழமையான கட்டிடத்தில் இயங்கி வருவதை ஒப்புக்கொண்ட பொலிஸ் ஊடக பிரதம பேச்சாளர் அங்கு கடமை புரியும் உத்தியோகத்தர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் புதிய கட்டிடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிகமாக 25 பொலிசாரை இங்கு இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
 
அதிகரித்துவரும் விபத்துக்கள் தொடர்பில் மக்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்? என கேட்டோம் அதற்க்கு பதிலளித்த பொலிஸ் ஊடக பேச்சாளரான அஜித் ரோகன
 
மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் சட்டம் ஒழுங்கை பின்பற்றுவதன் ஊடாக நாட்டின் சட்டங்களை மதிக்க வேண்டும் என்றும் வாகன சாரதிகள் வாகன அனுமதிப்பத்திரங்கள் இல்லாது வாகனங்களைச் செலுத்தக்கூடாது என்றும் தங்களது பிள்ளைகளின் விடையத்தில் பெற்றோர் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் கூறிய அவர்
எவ்வளவுதான் பொலிசார் இறுக்கமாக செயற்பட்ட போதும் சிலர் பொலிசாரின் கட்டளைகளை மதிப்பது இல்லை என்றும் இதனால் தான் விபத்துக்களும் குற்றங்களும் அதிகரித்துள்ளதாகவும் இவற்றை கண்டு தாங்கள் வேதனையடைவதாகவும் தெரிவித்தார்.

பொலிசார் நடவடிக்கைகளை எடுக்கின்ற போதிலும் அரசு சட்டங்களை கொண்டு வருகின்ற போதிலும் மக்கள் அவற்றை மதிக்காது சென்றால் விபத்துக்களும் குற்றங்களும் ஏற்படும் என்பது தவிர்க்க முடியாதுதான்
வீதி ஒழுங்குகளையும் சட்டத்தையும் மதிப்போம் கால்நடைகளை வீதிகளில் உலவ விடுவதை தவிர்ப்போம் பெற்றோர் தங்களது பிள்ளைகளை சிறப்பாய் பேணுவோம் மீண்டும் ஒரு விபத்து, குற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

No comments:

Post a Comment