Saturday, February 22, 2014

ராஜிவ் கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுவிக்கும் முடிவை தமிழக அரசு திரும்ப பெற வலியுறுத்தி: அண்ணாசாலையில் மாணவர் காங்கிரசார் திடீர் ஆர்ப்பாட்டம்!

Saturday, February 22, 2014
சென்னை::ராஜிவ் கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுவிக்கும் முடிவை தமிழக அரசு திரும்ப பெற வலியுறுத்தி தமிழக மாணவர் காங்கிரசார் நேற்று அண்ணாசாலையில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாணவர் காங்கிரஸ் தலைவர் சுனில்ராஜா தலைமை வகித்தார். அகில இந்திய துணை தலைவர் ரோஜி ஜான் முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் மணிகண்டன், மாவட்ட தலைவர்கள் லோகேஷ்குமார், மதன்ராஜ், மாவட்ட பொதுச் செயலாளர் சோழ பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

7 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவை திரும்ப பெற கோரி ஷமிட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் சுனில்ராஜா பேசுகையில், ‘‘வாக்குகளை பெறுவதற்காக தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இதை ஊக்குவிக்கக் கூடாது. ராஜிவ் காந்தியை கொலை செய்த குற்றவாளிகள் இவர்கள். இவர்கள் மீதான வழக்கு மத்திய அரசின் கீழ் வருகிறது. இவர்களை மன்னித்து விடுவிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது. எனவே தமிழக அரசு இந்த 7 பேரை விடுவிக்க எடுத்த முடிவை உடனடியாக திரும்ப பெற வேண்டும்’’ என்றார்.

No comments:

Post a Comment