Saturday, February 22, 2014

ராஜிவ் கொலையாளிகள் விவகாரத்தில் அரிச்சுவடி தெரியாமல் பேசுகிறார் வைகோ: தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்!

Saturday, February 22, 2014
சென்னை::படுகொலை செய்யப்பட்ட ராஜிவ்காந்தி மற்றும் 15 தமிழர்களுக்கு நீதி கேட்டு தமிழக இளைஞர் காங்கிரஸ் சார்பில் சென்னையில் நேற்று உண்ணாவிரதம் நடைபெற்றது.அண்ணாசாலை காயிதே மில்லத் நினைவிடம் அருகில் நேற்று நடைபெற்ற இந்த உண்ணாவிரதத்தை மாநில பொதுச்செயலாளர் ராஜேஷ் துவக்கி வைத்தார். தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் முன்னிலை வகித்தார். முன்னாள் தலைவர்கள் குமரிஅனந்தன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மாநில பொதுச் செயலாளர் நாசே. ராமச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ், விஜயதாரணி எம்எல்ஏ, மாவட்டத் தலைவர்கள் கராத்தே தியாகராஜன், ரங்கபாஷ்யம், ராயபுரம் மனோ, இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அனுராதா அபி, மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.எம்.குமார் உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.உண்ணாவிரதத்தில் ஞானதேசிகன் பேசியதாவது:

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், நாங்கள் குற்றவாளிகள் தான், எங்கள் தண்டனையை குறைக்க வேண்டும் என்று கூறி தான் கருணை மனு அளித்தார்கள். இந்த அரிச்சுவடி கூட தெரியாமல் வைகோ பேசுகிறார். தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டு விட்டால், அந்த குற்றத்தின் தன்மை ஒன்றும் குறைந்துவிடாது.  பெரியார் திராவிட கழக செயலாளர் ராமகிருஷ்ணன், மத்திய அமைச்சர்களை தமிழகத்திற்குள் அனுமதிக்க மாட்டோம் என கூறியிருக்கிறார். முடிந்தால் தடுத்து பாருங்கள். எதற்கும் நாங்களும் தயாராக இருக்கிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.உண்ணாவிரத ஏற்பாடுகளை இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் நாசே.ராஜேஷ் செய்திருந்தார்.

No comments:

Post a Comment