Saturday, February 22, 2014

கோஷ்டி மோதல், வாள்வெட்டு சம்பவங்கள் வெகுவாக அதிகரிப்பு- யாழில் கடந்த வாரம் 38 சம்பவங்கள் பதிவு!

Saturday, February 22, 2014
இலங்கை::யாழ். மாவட்டத்தில் மேற்கொண்ட விசேட இரவு, பகல் ரோந்து நடவடிக்கையின்போது பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடையோர் மற்றும் சந்தேக நபர்கள் 210 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ். பொலிஸ் பிரிவின் கீழ் 126 பேரும், காங்கேசன்துறை பிரிவு பொலிஸ் நிலையங்களில் ஊடாக 84 பேரும் இவ்வாறு கடந்த வாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
அதிகப்படியாக அடிதடி, கோஸ்டி மோதல் மற்றும் வாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட 38 பேர் கடந்த ஒருவாரத்தில் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளை, திருட்டு மற்றும் மோசடி போன்ற சம்பவங்கள் தொடர்பாக 21 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில், குற்றச் செயல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் தொகை கடந்த வாரத்தில் வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர். இதேவேளை, சந்தேகத்தின் பேரில் 43 பேரும், நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டும் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 29 பேரும், குடிபோதையில் வாகனம் செலுத்திய 12 பேரும் கடந்த வாரத்தில் கைதானதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment