Saturday, January 11, 2014

யாழ். மாவட்ட புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் உதய பெரேரா பொறுப்பேற்றார்!

Saturday, January 11, 2014
இலங்கை::கிளிநொச்சி மாவட்டத்தின் கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் உதய பெரேரா, யாழ். மாவட்டத்தின் புதிய இராணுவத் தளபதியாக நேற்று தனது கடமைகளைப் பாலாலி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் வைத்து பொறுப்பேற்றுள்ளார்.
 
யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியாக கடந்த 2009ம் ஆண்டு முதல் நான்கு வருடங்களாகப் பதவி வகித்து வந்த மகிந்த ஹத்துறுசிங்க, கொழும்பு இராணுவத் தலைமையகத்துக்கு இடமாற்றம் பெற்றுள்ளதையடுத்து, புதிய இராணுவத் தளபதியாக உதய பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கமைய நேற்றுக் காலை பலாலி பாதுகாப்பு படைத் தலைமைகயத்தில் தனது கடமைகளைப் பெறுப்பேற்றுக் கொண்டதுடன், தனது முதல் நிகழ்வாக இடம்பெயர்ந்து முகாம்களிலுள்ள மாணவர்களுக்கு புலமை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பரிசில்களையும் வழங்கி வைத்துள்ளார்..
 
2600 பிள்ளைகளுக்கு புலமைப் பரிசில் நிதி உதவி கிடைக்க வழி செய்துள்ளேன் . இந்த வகையில் தற்போது யாழ் மாவட்டத்தின் படைகளின் கட்டளைத் தளபதியாக வந்த பின்னர் நான் முதல் தடவையாக அலுவலக ரீதியாக கல்விக்கான புலமைப்பரிசில் நிதி வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்வதையிட்டு பெரு மகிழ்ச்சி அடைகின்றேன் என யாழ் மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரெரா தெரிவித்துள்ளார் .
மல்லாகம் கோணப்புலம் இடம் பெயர்ந்தோர் நலன் புரி முகாமில் தங்கியுள்ள நுர்று மாணவ மாணவிகளுக்கு கல்விக்கான நல்லிணக்க புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு கோணப்புலம் முகாமுக்கு அருகாமையில் உள்ள வைரவர் கோவில் வீதியில் இடம் பெற்றது .
இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய மேஜர் ஜெனரல் உதய பெரெரா கடந்த காலத்தில் பலவேறு துயரங்களுக்கும் உள்ளாகியுள்ளீர்கள் . தற்போது அமைதியான நிலமை காணப்படுகின்றது .
நான் இன்று பெற்றோர்களிடம் வேண்டுவது பிள்ளைகளை பிழையான வழியில் செல்லவிடாது அவர்களை பாடசாலைகளுக்கு அனுப்பி கல்வி கற்பிக்க வேண்டும் என்பதே . பிள்ளைகளுக்கும் கூறுகின்றேன் நீங்கள் கஸ்டப்பட்டு கல்வி கற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் .
இன்று வழங்கப்படும் கல்வி நிதியானது வெளிநாட்டில் வாழும் இரண்டு பிரமுகர்கள் வழங்கியதில் இருந்தே வழங்கப்படுகின்றது . நிக்கி விக்கிரமசிங்கா ஐந்து லட்சம் ரூபா நிதியையும் மற்றையவரான ஒக்கோன் அவர்கள் ஒரு லட்சத்தி ஐம்பதாயிரம் ரூபா நிதியையும் வழங்கியுள்ளார்கள் .
அவாகள் மிகவும் கஸ்டப்பட்டு உழைத்த பணத்தில் இருந்தே இந்த நிதி உதவியை வழங்கியுள்ளார்கள் . இது கூட வறுமையான மாணவர்களின் கல்வியை மேம்படுத்த வேண்டும் உயர்த்த வேண்டும் என்ற ஆவலில் தந்துள்ளார்கள் .
இதனை நல்லமுறையில் பயன்படுத்தி கல்வியில் முன்னேற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார் .

No comments:

Post a Comment