Saturday, January 11, 2014

வடமராட்சியில் வீதி விபத்து: 12 பேர் படுகாயம்!

Saturday, January 11, 2014
இலங்கை::வடமராட்சி கரணவாய் பகுதியில் நேற்றைய தினம்  பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதுடன், இரு வாகனங்களும் மிகவும் சேதமடைந்துள்ளன. இவ் வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 7 பேர் பருத்தித்துறை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இவ் விபத்துத் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, வடமராட்சி கரணவாய் பகுதியில் இல. 750 தனியார் பேருந்து ஒன்றும், பார ஊர்தி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளனர். இவ்விபத்தில் மானிப்பாயைச் சேர்ந்த தயாபரன் (வயது 43), கொற்றாவத்தையைச் சேர்ந்த த.சுமணா (வயது 26) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில், அவசர சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
ஏனையோர், பருத்தித்துறை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களில் 7 பேர் அவ் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இச் சம்பவம் தொடர்பாக நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், இவ் வாகன விபத்து இடம்பெற்றுள்ளது என இல.750 தனியார் சிற்றூர்தியில் பயணித்தவர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment