Saturday, January 11, 2014

பட்டிப்பொங்கலன்று பளைவரை ரயில் ஓட்டம்!

Saturday, January 11, 2014
இலங்கை::இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் வடக்கு ரயில் பாதை புனரமைப்புப் பணிகள் யாழ். எழுதுமட்டுவாள் வரை பூர்த்தியடைந்துள்ள நிலையில், எதிர்வரும் 15ஆம் திகதி பளைவரை பரீட்சார்த்த ரயில் ஓட்டம் இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
 
வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம்வரையான ரயில் பாதை புனரமைப்புக்கு 1,500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி கிடைத்திருந்தது.
ஓமந்தையிலிருந்து கிளிநொச்சிவரையான ரயில் சேவையை 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்துவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இதனைத் தொடர்ந்து மீதி இடங்களுக்கான ரயில் பாதை புனரமைக்கப்பட்டுவந்த நிலையில், தற்போது எழுதுமட்டுவாள்வரை முடிவடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
 
 
 

No comments:

Post a Comment