இலங்கை::மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் இந்திய வீட்டுத்திட்டம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்க்கும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகளில் முதல் கட்டமாக சுமார் 2000 வீடுகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இந்த வீடுகளை அமைப்பதில் மீள்குடியேற்ற பகுதிகளில் உள்ள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் வகையில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் குறித்த பகுதிகளுக்கு சென்று பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கிவருகின்றார்.
இதன் கீழ் வெல்லாவெளி பிரதேசத்தில் இந்திய அரசின் உதவி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் வீடமைப்பு பணிகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் வெல்லாவெளி பிரதேச செயலகத்தில் பிரதேச அபிவிருத்தி குழு தலைவரும் மீள்குடியேற்ற பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர்களான பொன்.ரவீந்திரன்,திருமதி ஞானமலர் மற்றும் பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் உமாபதி,வீடமைப்பு அதிகாரசபையின் அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது வீடுகளின் நிர்மாணப்பணிகளின்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டதுடன் அவற்றில் உடனடியாக தீர்க்ககூடிய பிரச்சினைகளுக்கு தீர்வுபெற்றுக்கொடுக்கப்பட்டது.

No comments:
Post a Comment