இலங்கை::யாழ்ப்பாணம் பண்ணைக்கடலில் ஊர்காவற்றுறையைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்று யாழ். பண்ணைக் கடலில் சடலம் ஒன்று மிதப்பதைக் கண்ட மீனவர்கள் யாழ். பொலிஸாரிடம் முறையிட்டிருக்கின்றனர். கடல் நீரோட்டம் என்பதால் சடலம் நகர்ந்திருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில், நேற்று முதல் தேடுதல் நடத்திய பொலிஸாரும், மீனவர்களும் இன்று காலை வரை நடத்திய தேடுதலின் பலனாக சடலம் காணப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் ஊர்காவற்றுயைச் சேர்ந்த வயரிங் வேலை செய்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஒருபிள்ளையின் தந்தையான அருள் மதன் (வயது 30), நேற்று முன்தினம் பிற்பகல் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நோக்கிச் செல்வதற்காக நின்றிருந்ததாக அவரை இறுதிகாகக் கண்டவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த நிலையில் குறித்த குடும்பஸ்தரின் மரணம் தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது வரையில் குறித்த பகுதியிலேயே சடலம் காணப்படுகிறது.

No comments:
Post a Comment